குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ - பிரியா ஜோடி... வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!
தமிழில் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ, அவர் தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

Atlee Priya second child
இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா, தங்களது மூன்று பேர் கொண்ட ஃபேமிலி தற்போது பெரிதாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே மகன் மீரின் அன்பான பெற்றோராக இருக்கும் பிரியா மற்றும் அட்லீ, தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
மீண்டும் தந்தையாகும் அட்லீ
இதுகுறித்து அவர்கள் பதிவிட்டுள்ளதாவது : "எங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் எங்கள் வீடு இன்னும் இனிமையானதாக மாறப்போகிறது! ஆம்! நாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூஃபி," என்று அந்த ஜோடி பதிவிட்டுள்ளனர்.
குவியும் வாழ்த்து
இந்த ஜோடி இந்த குட் நியூஸை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, திரையுலகினர் உட்பட நெட்டிசன்கள் வாழ்த்து மழை பொழிய தொடங்கினர். "மிக மிக அழகு. வாழ்த்துகள் என் அழகான மம்மா," என்று நடிகை சமந்தா ரூத் பிரபு கமெண்ட் செய்துள்ளார். இதுதவிர ஏராளமான ரசிகர்களும் அட்லீ - ப்ரியா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அட்லீயின் பயணம்
அட்லீ மற்றும் பிரியா ஜோடி 2014-ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2023-ல் மீர் என்ற முதல் குழந்தை பிறந்தது. அட்லீ 2013-ல் 'ராஜா ராணி' மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய்யுடன் 'தெறி', 'மெர்சல்', மற்றும் 'பிகில்' உள்ளிட்ட தொடர் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் அவர் பிரபலமானார்.
பான் இந்தியா டைரக்டர்
2023-ல், ஷாருக்கான் நடித்த 'ஜவான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், இது இந்திய சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது. தற்போது அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படம் ஒன்று தயாராகி வருகிறது. அதில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். சுமார் 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

