எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு: லட்சத்தில் இருந்து கோடிக்கு!
இயக்குனராக லட்சங்களில் சம்பளம் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா, நடிகரான பின் கோடிகளில் புரள்கிறார். அவரது சொத்து மதிப்பு விவரங்கள் இங்கே.
1 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
Follow Us
19
)
எஸ்.ஜே. சூர்யா சொத்து மதிப்பு
பாக்யராஜ், பாரதிராஜா, வசந்த் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யாவுக்கு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1999-ல் அஜித்தை வைத்து 'வாலி' படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
29
எஸ்.ஜே. சூர்யா
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. சூர்யா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா படிப்பை முடித்தார். ஹீரோவாக ஆசைப்பட்டவர், நிதி நெருக்கடியால் உதவி இயக்குனரானார்.
39
எஸ்.ஜே. சூர்யா
குறைந்த சம்பளத்தில் 'வாலி'யில் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யா, 'குஷி' படத்திற்கு லட்சங்களில் சம்பளம் பெற்றார். அட்வான்ஸ் தொகையை உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். அதில் ஏ.ஆர். முருகதாஸும் ஒருவர்.
49
படம் இயக்கவில்லை
நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா, 'நியூ' படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தார்.
59
ஹீரோ ஒர்க் ஆகவில்லை
ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால், சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். 'இறைவி' படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
69
வில்லன் அவதாரம்
'ஸ்பைடர்', 'மெர்சல்' படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.
79
எஸ் ஜே சூர்யா வில்லன்
'ராயன்', 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
89
எஸ்.ஜே. சூர்யா சொத்து மதிப்பு
'இறைவி' படத்திற்குப் பின் கோடிகளில் சம்பளம் வாங்கும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைப் பாராட்டிய விஜய் - தமிழில்
99
எஸ் ஜே சூர்யா சொகுசு கார்கள்
சென்னை மற்றும் சொந்த ஊரில் சொத்துகள், சொகுசு கார்கள் வைத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி எனக் கூறப்படுகிறது.