- Home
- Gallery
- "கலக்கிட்டீங்க நிதிலன்".. விஜய் சேதுபதியின் மகாராஜா - படம் பார்த்து இயக்குனரை வியந்து பாராட்டிய தளபதி விஜய்!
"கலக்கிட்டீங்க நிதிலன்".. விஜய் சேதுபதியின் மகாராஜா - படம் பார்த்து இயக்குனரை வியந்து பாராட்டிய தளபதி விஜய்!
Thalapathy Vijay : மகாராஜா பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனை சந்தித்து பேசியுள்ளார் பிரபல நடிகர் தளபதி விஜய்.

goat
தளபதி விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து ஒரு டீசர் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
H Vinoth
தனது 68வது திரைப்படத்தை தொடர்ந்து, பிரபல இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் தனது 69வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய். அந்த திரைப்படத்தோடு தனது கலை உலக வாழ்க்கைக்கு குட் பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் தலைவராக களம் காணவிருக்கிறார். குறிப்பாக 2026ம் ஆண்டு தேர்தலில் அவர் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
maharaja
இந்நிலையில் இவ்வாண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், கன்டென்ட் ரீதியாகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தை, தளபதி விஜய் தற்பொழுது பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Vijay
மேலும் ஏற்கனவே நடிகை ரம்பாவை சந்தித்து பேசிய தளபதி விஜய், மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனை நேரில் சந்தித்து, அவரை பாராட்டி அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.