ரூ.5000 கோடி வசூல்.. 2024-ல் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த இந்திய படங்கள்.. ஆட்டத்தையே மாற்றிய கல்கி 2898 ஏடி!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல படங்கள் வெளியானாலும் ஜூன் 27-ம் தேதி வெளியான கல்கி 2898 ஏடி படம் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஆட்டத்தையே மாற்றிய

Indian Films collected Rs 5000 Crores in 2024 first half Boxoffice Kalki 2898 AD tops in the list Rya

2024 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில் பல படங்கள் பான் இந்தியா அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கவனம் ஈர்த்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல படங்கள் வெளியானாலும் ஜூன் 27-ம் தேதி வெளியான கல்கி 2898 ஏடி படம் இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் ஆட்டத்தையே மாற்றியது. ஆம். எதிர்ப்பார்த்ததை விட இந்த படம் சிறப்பான வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

2024 ஆம் ஆண்டின் முதல் பாதி இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹5,000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.  முதல் பாதி ஆண்டி ஜூன் மாதம்தான் வசூலில் சிறந்த மாதமாக இருந்தது. ஆம். ஜூன் மாதத்தில் மட்டும் இந்திய பாக்ஸ் ஆபிஸின் மொத்த வசூல். ₹1,200 கோடியைத் தாண்டியுள்ளது  இதில் கல்கி 2898 ஏடி படத்தின் வெற்றி முக்கிய பங்கு வகித்துள்ளது. கல்கி படம் பாக்ஸ் ஆபிஸில் 60% க்கும் அதிகமாக பங்களித்தது.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வெளியான படங்களின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் ₹5,015 கோடியாக உள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 3% அதிகமாகும். நாக் அஸ்வினின் கல்கி 2898 ஏடி 2024 இன் முதல் பாதியில் அதிக வசூல் செய்த திரைப்படமாகும்,. ஹ்ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தின் வசூலை விட கல்கி படத்தின் வசூல் 3 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது. கல்கி 2898 ஏடி படம் இந்த ஆண்டின் இதுவரையான மொத்த வசூலில் 15%க்கும் மேல் பங்களித்துள்ளது. 

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்? அதை தான் இப்படி மறைமுகமாக சொல்லிருக்காரா?

2024 முதல் பாதியில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன?

இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் அதிரவைத்த சிறந்த படங்களின் பட்டியலில் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்கள் இடம்பெற்றுள்ளது. டாப் 10 பட்டியலில் தலா 3 தெலுங்கு படங்கள் , 3 ஹிந்தி மற்றும் 3 மலையாள படங்கள் மற்றும் ஒரு ஹாலிவுட் படம் என வசூலில் மாஸ் காட்டி உள்ளனர்.

அதன்படி ஹ்ருத்திக் ரோஷனின் ஃபைட்டர்ரூ. ₹243 கோடியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, ஹனுமான் ரூ.240 கோடி வசூலுட 3 இடத்தில் உள்ளது. ரூ.178 கோடி வசூலுடன் ஷைத்தான் 4-வது இடத்திலும், மஞ்சுமெல் பாய்ஸ் ரூ. 170 கோடி வசூலுடன் 5-வது இடத்தையும் பிடித்துள்ளன. மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் ரூ 142 கோடி வசூலுடன் 6வவது இடத்திலும்,  காட்ஜில்லா x காங்: தி நியூ எம்பயர் ரூ₹136 கோடி வசூலுடன் 7வது இடத்திலும் உள்ளன.

முஞ்யா என்ற ஹிந்தி படம் ரூ.121 கோடி வசூலுடன் 8-வது இடத்த்லும், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் ரூ104 கோடி வசூலுடன் 9வது இடத்திலும், ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம் ரூ.101 கோடி வசூலுடன் 10-வது இடத்திலும் உள்ளது.

ஆனால் அதே நேரம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​இந்தியப் பாக்ஸ் ஆபிஸில் ஹிந்தி திரையுலகின் பங்கு 37%லிருந்து 35% ஆகக் குறைத்துள்ளது.

2023ல் முதல் பாதியில் பதான் செய்த சாதனையை போல இந்த ஆண்டு இதுவரை எந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் எந்த படமும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. மலையாள திரையுலகம் 2023-ல் வசூல் செய்ததை விட 2024 இன் முதல் 6மாதங்களில், அதிகமாக வசூல் செய்துள்ளது. 

கல்கி 2898 ஏடி : பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்து தவறான தகவல்.. இருவர் மீது வழக்கு தொடர்ந்த படக்குழு..

தெலுங்கு திரைப்படங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு தங்கள் பங்கை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது, மறுபுறம், தமிழ்  படங்கள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் குறைவாகவே வசூலித்துள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் இரண்டாம் பாதியிலும் தெலுங்கில் புஷ்பா 2: தி ரூல், ஹிந்தியில் ஸ்த்ரீ 2, சிங்கம் அகெய்ன், தமிழில் விஜய்யின் கோடி, தெலுங்கில் தேவாரா: பார்ட் 1 போன்ற மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வெளியாக உள்ளது. எனவே 2024-ம் ஆண்டின் முதல் பாதியை விட இரண்டாம மிகவும் சிறப்பாக செயல்படும் என்பதே திரை ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios