படப்பிடிப்பு முடிவடைவதற்குள் விற்பனையான கார்த்தியின் 'சர்தார்'
படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

sardar movie
விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ' சர்தார் ' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் . விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தில் நடிகை ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இதில் நடிகர் கார்த்தி இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
Sardar
மேலும் படத்திற்கான அவரது தோற்றம் குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இப்படத்தில் கார்த்தி, ராஷி கண்ணா தவிர, ரஜிஷா விஜயன் மற்றும் லைலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
sardar
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்கு முன்பே படத்தின் OTT உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமைகள் ஏற்கனவே வாங்கிவிட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கின் ஒரு பிராந்திய OTT சேனல் டிஜிட்டல் உரிமையைப் பெற்றதாகவும், தமிழ்நாட்டில் உள்ள பிரபல சேனல் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
sardar
'சர்தார்' படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி மேலும் இரண்டு படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார், அவை தற்காலிகமாக 'கார்த்தி 24' மற்றும் 'கார்த்தி 25' என்று அழைக்கப்படுகின்றன. அதற்கான விவரங்கள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.