குஷ்பு, நமீதா, நயனை தொடர்ந்து... நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்! இது எங்க? - முழு விவரம் உள்ளே
நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே காரணம். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
சினிமா நடிகைகள் மீதான அதீத அன்பால், அவர்களுக்காக கோவில்கள் கட்டும் சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன. இத்தகைய அன்பைப் பெற்ற நடிகைகள் வெகு சிலரே, அந்த வகையில் இதற்கு முன்னர் நடிகைகள் குஷ்பு, நமீதா, நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டிய சம்பவங்கள் அரங்கேறி இருந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் உள்ள அவரது ரசிகர்கள் கோவில் கட்டி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... தளபதியை சந்தித்த புரட்சிதளபதி! விஜய்யின் புது ஆபிஸுக்கு திடீர் விசிட் அடித்த மார்க் ஆண்டனி டீம்- பின்னணி என்ன?
அந்த வரிசையில் தற்போது நடிகை சமந்தா இணைந்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த நடிகை சமந்தாவின் தீவிர ரசிகரான தெனாலி சந்தீப் என்பவர் தான் தற்போது நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டி உள்ளார். அவர் ஆந்திர மாநிலம் பாபட்லாவில் உள்ள ஆலபாடு என்கிர கிராமத்தில் இந்த கோவிலை கட்டி உள்ளார். அந்த கோவிலில் வைக்கப்பட உள்ள நடிகை சமந்தாவின் சிலையின் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
நடிகை சமந்தாவின் பிறந்தநாள் ஏப்ரல் 28-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்த கோவிலை திறக்க உள்ளதாக தெனாலி சந்தீப் அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் அழகைப் பார்த்தோ அல்லது அவரது நடிப்பைப் பார்த்தோ அவரது ரசிகர் ஆகவில்லை என கூறியுள்ள தெனாலி, சமந்தா தன்னுடைய பிரதியுஷா அறக்கட்டளை மூலம் செய்துவரும் பல்வேறு சமூக நலப்பணிகள் தன்னை மிகவும் கவர்ந்ததால், அவருடைய ரசிகர் ஆனதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அட்லீக்கு விபூதி அடித்துவிட்டு... அக்கட தேசத்து இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்த விஜய் - தளபதி 68 டைரக்டர் இவரா?