கபாலீஸ்வரர் கோவிலில் இயக்குனருடன் மாலை மாற்றிக்கொண்டாரா மீரா மிதுன்? புகைப்படத்தோடு வெளியான தகவல்!
சர்ச்சை நாயகி மீரா மிதுனும், இயக்குனர் ஒருவருடன் சென்று... சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மாலை மாற்றி கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா நடிகையும், சூப்பர் மாடலுமான மீரா மிதுன் எது செய்தாலும், அதனை கழுவி ஊற்றுவதற்கு என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கூட்டம் உள்ளது. அதற்க்கு ஏற்ற போல் தான் மீரா மிதுனும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்தார். தனக்கு வரும் பட வாய்ப்புகளை சூர்யா, விஜய் போன்ற வாரிசு நடிகர்கள் கெடுப்பதாக.... வீடியோ வெளியிட்டு கதறியது மட்டும் இன்றி வாயிக்கு வந்தது எல்லாம் பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்டார்.
பின்னர் பட்டியளித்தவர்கள் பற்றி அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்த சம்பவத்திற்கு பின்னர் கொஞ்சம் அடங்கி போயுள்ள மீரா... அவ்வப்போது, ஆல்பம் சாங் எடுக்கிறேன் என்கிற பெயரில் கவர்ச்சி அட்ராசிட்டி செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்: மலைக்க வைக்கும் பிரமாண்டம்... புல்லரிக்க வைக்கும் 'பொன்னியின் செல்வன்' டீசர் வெளியானது!!
மேலும் இவர், இயக்குனர் அன்பரசன் என்பவர் இயக்கி வரும் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமான 'பேய காணோம்' . என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: உண்மையில் விக்ரமுக்கு என்னதான் பிரச்சனை..! மருத்துவமனை அறிக்கை வெளியானது..!
ஒரு பேய்... மற்றொரு பேய காணவில்லை என்று புகார் கொடுக்கும் விதமாக இப்படடம் உருவாகி உள்ளது. கவுசிக் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், மீரா மிதுன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் தருண் கோபி, கோதண்டம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: அதிரடி... சரவெடி.. இன்று முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசனின் 'விக்ரம்' !!
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கூட, மீரா மிதுனுக்கும், காமெடி நடிகர் கோதண்டத்திற்கும்,இடையே பிரச்சனை வந்தது. அதே போல் படப்பிடிப்பு முடியும் முன்னரே இவர் இரவோடு இரவாக சென்று விட்டார் என படக்குழுவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது மீரா மிதுன் 'பேய காணும்' படத்தின் இயக்குனர் அன்பரானுடன் நேற்று மாலை மாற்றிக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுளளது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தன்னை பற்றி எந்த வதந்தி வந்தாலும் அது குறித்து விளக்கம் கொடுக்கும் மீரா மிதுன், இதுகுறித்தும் விளக்கம் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.