அதிரடி... சரவெடி.. இன்று முதல் ஓடிடியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசனின் 'விக்ரம்' !!
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட 'விக்ரம் ' திரைப்படம் இன்று முதல், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட 'விக்ரம் ' திரைப்படம் இன்று முதல், ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சமீப காலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்ட திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடும் போது, மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், மாஸ்டர், பீஸ்ட், அண்ணாத்த, போன்ற படங்களே சிறந்த உதாரணம். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த 'விக்ரம்' திரைப்படம், இன்று முதல் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி உள்ளது.
மேலும் செய்திகள்: 'விக்ரம்' படத்திற்காக உதயநிதிக்கு நினைவு பரிசு கொடுத்த கமல்..! பதிலுக்கு அவர் கொடுத்தது என்ன தெரியுமா?
இதனை உறுதி செய்யும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தமிழ் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி இதுகுறித்த புரோமோ ஒன்றை வெளியிட்டு, ஜூன் 8 ஆம் தேதி 'விக்ரம்' திரைப்படம் வெளியாக உள்ளதை உறுதி செய்தது. 'விக்ரம்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதால் கமல் ரசிகர்கள் உச்சாகமடைந்துள்ளனர். ஒருமுறை பார்த்தவர்கள் கூட விக்ரம் படத்தை மீண்டும்.. மீண்டும் பார்க்க ஆர்வம் உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் படத்தை பார்காதவர்களும் 'விக்ரம்' படத்தை ஆர்வமுடன் பார்த்துவருகிறார்கள்.
மேலும் செய்திகள்: எந்த நடிகைக்கு வரும் இப்படி ஒரு துணிச்சல்? ஆண்ரியாவின் முயற்சியை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!! வைரல் வீடியோ.
இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம், தமிழகத்தில் ஐந்தாவது வாரத்தில், கூட அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்தது. இது கமலின் திரையுலக வாழ்க்கையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் புதிய வசூல் சாதனைகளை செய்த படமாகவும் மாறியது. உலக அளவில் விக்ரம் திரைப்படம் ரூ 400 கோடிக்கு மேல் செய்துள்ளது. அந்த வகையில், இந்தியாவில் மட்டும் விக்ரம் இதுவரை ரூ.290 கோடி வசூலித்துள்ளதாக சினிட்ராக் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ரூ.172 கோடியும், கேரளாவில் ரூ.39 கோடியும் , தெலுங்கு மாநிலங்களில் ரூ.38 கோடியும், கர்நாடகாவில் ரூ.24 கோடியும், ஹிந்தி திரையுலகில் ரூ.16.5 கோடி வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: கவர்ச்சி காட்டுவதில் அக்கா யாஷிகாவுக்கே டஃப் கொடுக்கும் ஒஷீன்..! ப்பா... அதுக்குன்னு இப்படியா?