MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு

தமிழில் தயாரிப்பாளராக களமிறங்கும் தோனி... முதல் படமே ‘லவ் டுடே’ பிரபலத்துடன் - வெளியானது மாஸ் அறிவிப்பு

கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்து தான் தயாரிக்க உள்ள முதல் தமிழ்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 27 2023, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான எம்.எஸ்.தோனிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனால் சென்னை மீது அவருக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில் கிரிக்கெட்டில் கலக்கிய தோனி, தற்போது சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரது மனைவி சாக்‌ஷி நிர்வகித்து வரும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அந்நிறுவனம் முதன்முதலில் தமிழ் படத்தை தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... KGF பட நடிகரை கரம் பிடித்த தமிழ் பட நடிகை ஹரிபிரியா..! ரசிகர்கள் வாழ்த்து..!

34

Lets Get Married என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடிக்க உள்ளாராம். இவர் கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆவார்.

44

மேலும் இதில் நடிகை நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அதர்வா தி ஆரிஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை இயக்கியவர் ஆவார். பயணத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ரூ.50 கோடிக்கு வீடும் வரல... காரும் வரல! கே.எல்.ராகுல் திருமண பரிசு குறித்த உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எம். எஸ். தோனி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved