பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பும் தனுஷின் 'வாத்தி'..! முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?
நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான 'வாத்தி' திரைப்படத்தின், முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து, நேற்று வெளியான திரைப்படம் வாத்தி. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை, இயக்குனர் வெங்கி அட்லூரி, பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத ஆசிரியர் வேடத்தில் நடித்து மிரட்டி இருந்ததோடு, குழந்தைகளுக்கு கல்வி என்பது எந்த அளவுக்கு முக்கியம், என்கிற சமூக கருத்தையும் வலியுறுத்தினார். அதே போல் ஆசிரியராக நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை தனுஷ் வெளிப்படுத்தியதாக தனுஷை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முன்னணி இயக்குனர் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் சேதுபதி..! இது தான் காரணமா?
தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷரா, ஆடுகளம் நரேன், இளவரசு, ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, மற்றும் பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர்.
Dhanush
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'வாத்தி' படத்திற்கு, ஜே யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
சமந்தா செய்வதை பார்த்து பயந்துவிட்டேன்... உடனே நிறுத்த வேண்டும்! நடிகர் மனோஜ் பாஜ்பாய் அட்வைஸ்!
இந்நிலையில் 'வாத்தி' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. வர்த்தக ஆய்வாளர்கள் கூற்றுப்படி, 'வாத்தி' திரைப்படம் முதல் நாள் மட்டும், இந்திய அளவில் சுமார் 12 முதல் 15 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் உயரும் என்று கூறியுள்ளனர்.