- Home
- Cinema
- Kuberaa : விஜய்யின் கோட் பட லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய தனுஷின் குபேரா!
Kuberaa : விஜய்யின் கோட் பட லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய தனுஷின் குபேரா!
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன கோட் திரைப்படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை தனுஷின் குபேரா திரைப்படம் முறியடித்து உள்ளதாம்.

Kuberaa Beat GOAT Box Office
நடிகர் தனுஷின் 51வது படமான குபேரா, கடந்த ஜூன் 20ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அப்படத்தை சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவும் நடித்திருந்தனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இப்படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தை சுமார் 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். இதில் தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது.
குபேரா பட ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?
குபேரா திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், ஆந்திராவில் இப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. தெலுங்கு ரசிகர்களுக்கு இப்படம் நன்கு கனெக்ட் ஆகி உள்ளதால், அங்கு வசூல் வேட்டையாடி வருகிறது. குபேரா படத்திற்கு கிடைத்து வரும் ரெஸ்பான்ஸை அடுத்து, நேற்று அப்படத்தின் சக்சஸ் மீட்டை ஐதராபாத்தில் நடத்தியது படக்குழு. அதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையால் தனுஷுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விருத்துள்ளார்.
குபேரா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
தனுஷ் நடித்த குபேரா திரைப்படம் முதல் நாளில் இருந்தே தமிழ்நாட்டை காட்டிலும் தெலுங்கு மாநிலங்களில் அதிகளவில் வசூலித்து வருகிறது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.14.5 கோடி வசூலித்த இப்படம் தெலுங்கில் மட்டும் 10 கோடி வசூலித்திருந்தது. அதேபோல் இரண்டாம் நாளில் ரூ.16.5 கோடி வசூலித்த இப்படம் தெலுங்கில் ரூ.11.5 கோடி வசூலித்தது. மூன்றாம் நாளான நேற்று இந்தியாவில் ரூ.17.25 கோடி வசூலித்த குபேரா திரைப்படம் தெலுங்கில் 10 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இதன்மூலம் மூன்று நாட்களில் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் அங்கு மட்டும் விரைவில் 50 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருகிறது.
கோட் பட வசூலை முறியடித்த குபேரா
குபேரா திரைப்படம் மூலம் தெலுங்கு மாநிலங்களில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்துள்ளார் தனுஷ். இதற்கு முன்னர் அவர் நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் குபேராவும் மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது நடிகர் விஜய்யின் கோட் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை குபேரா திரைப்படம் முறியடித்து உள்ளது. அதன்படி கோட் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே தெலுங்கு மாநிலங்களில் ரூ.19 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அந்த வசூலை இரண்டே நாட்களில் அள்ளிய குபேரா தற்போது அதைவிட டபுள் மடங்கு அதிகம் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது. குபேரா படம் மூலம் தெலுங்கில் நடிகர் தனுஷின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.