MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kenishaa: பாடகி கெனிஷாவுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்! பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

Kenishaa: பாடகி கெனிஷாவுக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்! பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

Defamation Case: இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவுக்கு அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 06 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாடகி கெனிஷா
Image Credit : Google

பாடகி கெனிஷா

பிரபல தமிழ் நடிகர் ஜெயம் ரவி - மனைவி ஆர்த்தி இருவரும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் பெங்களூருவை சேர்ந்த பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு ஏற்பட்ட நட்புதான் இந்த பிரிவுக்கு முக்கிய காரணம் என்று ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த ஜெயம் ரவி தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள, ஒரு ஆலோசகராகவும் நண்பராகவும் கெனிஷா தனக்கு உதவினார் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சமூக வலைத்தளங்களில் விலகி பாடகி கெனிஷா
Image Credit : Google

சமூக வலைத்தளங்களில் விலகி பாடகி கெனிஷா

எனினும், இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும், 'குடும்பத்தை உடைத்தவர்' என்ற ட்ரோல்களையும் கெனிஷா எதிர் கொண்டார். இதற்கு விளக்கம் அளித்த கெனிஷா, தங்களுக்கிடையே எல்லையைத் தாண்டிய எந்தவொரு தவறான உறவும் இல்லை என்றும், ஆலோசகர்-கிளையண்ட் என்ற முறையிலேயே பழகியதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இணையத்தில் பரவிய வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்கள் காரணமாக, சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டு, சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

Related Articles

Related image1
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
Related image2
Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!
35
சமூக வலைதளத்தில் அவதூறு
Image Credit : Asianet News

சமூக வலைதளத்தில் அவதூறு

இந்நிலையில் இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷாவுக்கு அபராதம் விதித்து ஷார்ஜா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கான முழு காரணம் என்னவென்று பார்க்கலாம்.

45
ரவி மோகனின் தோழி கெனிஷா
Image Credit : Asianet News

ரவி மோகனின் தோழி கெனிஷா

ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா நகரில் வசித்த இந்திய பெண் ஆன்லெட் மெர்லின் என்பவருக்கு எதிராக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நடிகர் ரவி மோகனின் தோழி கெனிஷா மற்றும் அருணா வீரராகவன் மீது அல்புகாரியா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபிய சட்டப்படி, ஒருவரை அவமானப்படுத்தினால் 2.5 லட்சம் திர்ஹாம் முதல் 5 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கலாம்.

55
1.30 லட்சம் ரூபாய் அபராதம்
Image Credit : stockPhoto

1.30 லட்சம் ரூபாய் அபராதம்

ஆன்லெட் மெர்லின் அளித்த புகாதின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ஷார்ஜா நீதிமன்றம் விசாரித்தது. இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிம்ச்ன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தலா 5 ஆயிரம் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபாய்) திர்ஹாம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
நீதிமன்றம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image2
Box Office Kings: முதல் நாளில் 100 கோடி வசூல்.! டாப் 5 நடிகர்களில் விஜய்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Recommended image3
Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!
Related Stories
Recommended image1
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள்... விஜய் படத்தில் போட்டு ஹிட்டாக்கிய யுகபாரதி - அது என்ன பாட்டு தெரியுமா?
Recommended image2
Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved