MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!

Peddi : ஜான்வி கபூர் காட்சிகளால் வெடித்த சர்ச்சை... மன்னிப்பு கேட்ட கையோடு இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு...!

Peddi Director Issues Public Apology : பெத்தி படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா, அப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்காக மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2026, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Peddi movie Controversy
Image Credit : Instagram

Peddi movie Controversy

ராம் சரண் - ஜான்வி கபூர் நடிப்பில், அறிவிப்பு வந்ததிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தெலுங்குப் படம்தான் 'பெத்தி'. இந்தப் படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, ஜான்வி கபூர் நடித்த 'அச்சியம்மா' என்ற கதாபாத்திரம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்தக் கதாபாத்திரத்தை மிகவும் மோசமாகவும், பெண்மையை அவமதிக்கும் வகையிலும் சித்தரித்திருப்பதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், இயக்குநர் புச்சி பாபு சனாவும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பெத்தி பட சர்ச்சை
Image Credit : X

பெத்தி பட சர்ச்சை

படத்தில் வரும் பல வன்முறையான காட்சிகளை, காதல் என்ற பெயரில் காட்டியிருப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். "பெண்களை வெறும் போகப் பொருளாகத்தான் இந்தப் படத்தில் காட்டியிருக்கிறார்கள். எந்த கிராமத்துப் பெண், தாவணி புடவையை அவிழ்த்துப் போட்டுக்கொண்டு ரோட்டில் நடப்பார்?" என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பல காட்சிகளில் ஜான்வி கபூரின் மார்பகங்களையும், இடுப்பையும் மட்டுமே ஃபோகஸ் செய்து காட்டியிருப்பதாகவும், "டைரக்டருக்கு வெட்கமா இல்லையா?" என்றும் ரசிகர்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ஹீரோ, ஹீரோயினின் முகத்தை வர்ணிக்கும்போது, கேமரா ஏன் மார்பகங்களையும் இடுப்பையும் காட்டுகிறது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

34
மன்னிப்பு கேட்ட இயக்குநர்
Image Credit : X

மன்னிப்பு கேட்ட இயக்குநர்

இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். பெண்களை அவமதிக்கும் வகையில் எந்தக் காட்சியும் உருவாக்கும் நோக்கம் எங்களுக்கில்லை என்றும், பார்வையாளர்களின் கருத்துகளை மரியாதையுடன் ஏற்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு திரைப்பட இயக்குநராக, சினிமா மக்களை மகிழ்விக்கவும், ஊக்குவிக்கவும், உணர்வுபூர்வமாக இணைக்கவும் வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது யாரையும் அசௌகரியமாகவும் அவமதிக்கப்பட்டதாகவும் உணரச் செய்யக்கூடாது. ‘பெத்தி’ படத்தின் சில காட்சிகள் குறித்து வந்த கருத்துகளை நாங்கள் கவனமாக எடுத்துக்கொண்டுள்ளோம். திரையிலும், திரை வெளியேயும் பெண்களுக்கு நான் எப்போதும் மிகுந்த மரியாதை கொடுத்து வந்துள்ளேன். எந்தப் பெண் கதாபாத்திரத்தையும் பொருளாக்கவோ அல்லது அவமதிப்பதோ எங்கள் நோக்கம் இல்லை. இருந்தபோதிலும், படத்தின் ஏதேனும் பகுதி அப்படிப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தால், அந்த உணர்வுகளை நாங்கள் மரியாதையுடன் ஏற்கிறோம்; எழுந்துள்ள விமர்சனங்களை புரிந்துகொண்டு மனமார்ந்த மன்னிப்புக் கோருகிறோம்.

44
நீக்கப்படும் காட்சிகள்
Image Credit : stockPhoto

நீக்கப்படும் காட்சிகள்

வந்துள்ள கருத்துகளை ஆய்வு செய்த பிறகு, தொடர்புடைய பகுதிகளில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளோம். சினிமா பார்வையாளர்களுடன் கொண்டுள்ள உறவின் மூலமே வளர்கிறது; கதைகளை சொல்லும் நாங்கள், மாறிக்கொண்டிருக்கும் பார்வைகளையும் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உடையவர்கள். ஒவ்வொரு பெணும் மரியாதையுடன் மதிக்கப்படவும், கண்ணியத்துடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படவும் தகுதியானவர். வலிமையான கதாபாத்திரங்களை கொண்டாடும் கதைகளை சொல்லுவதிலும், அந்த மதிப்புகளைப் பேணுவதிலும் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். தங்களின் கருத்துகளை நேர்மையாகவும் மனப்பூர்வமாகவும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநரின் இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தில் மாற்றங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து தயாரிப்பு தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜான்வி கபூர்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Theatre Releases : என்ன விலை முதல் சண்டக்காரி வரை... இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 13 படங்கள் என்னென்ன?
Recommended image2
சாமி கும்பிடும் இடத்தில் கவர்ச்சி ஆடையா? திஷா பதானியை சரமாரியாக வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Recommended image3
Cinema : AI, சைபர் கிரைம், வைரஸ் என எதிர்காலத்தை முன்கூட்டியே பேசிய 8 தமிழ் படங்கள்!
Related Stories
Recommended image1
Peddi Day 2 Box Office Collection: 2ம் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன பெத்தி... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?
Recommended image2
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved