MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Jana Nayagan: ஜனநாயகன் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு.. முதல்வர் விஜயின் முடிவால் எழுந்த திடீர் சிக்கல்

Jana Nayagan: ஜனநாயகன் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு.. முதல்வர் விஜயின் முடிவால் எழுந்த திடீர் சிக்கல்

Jana Nayagan: பல மாதங்களாக காத்திருக்கும் 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜயின் நிலைப்பாட்டை காரணம் காட்டி சில அமைப்புகள் வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 06 2026, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு
Image Credit : x

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு

தமிழக முதல்வரும், நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமாகக் கூறப்படும் 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக தொடர்கிறது என்றே கூறலாம். ஏற்கனவே பல மாதங்களாக வெளியீடு தள்ளிப்போகும் நிலையில், தற்போது படத்தின் மீது புது சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, விநியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டதாக தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தயாரிப்பு நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு
Image Credit : kvn production twitter

தயாரிப்பு நிறுவனம் எடுத்த முக்கிய முடிவு

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வணிக ஒப்பந்தங்களை நிறைவு செய்தது. ஆனால், வெளியீட்டு தேதி தொடர்ந்து உறுதி செய்யப்படாததால், பல மாதங்களாக காத்திருந்த விநியோகஸ்தர்களுக்கு முதலீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போது என்பது தெளிவாக தெரியாத சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரயிலில் இவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை.. இலவசமாக பயணிக்கலாம்.. யார் தெரியுமா?

34
கர்நாடகாவில் எழுந்துள்ள புதிய எதிர்ப்பு
Image Credit : KVN Productions

கர்நாடகாவில் எழுந்துள்ள புதிய எதிர்ப்பு

இதற்கிடையில், கர்நாடகாவில் இருந்து வந்துள்ள புதிய எதிர்ப்பு விவகாரம் மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலையை எதிர்த்து, சில கன்னட அமைப்புகள் 'ஜனநாயகன்' படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் படம் அங்கு வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உங்கள் குழந்தை இந்த தேதியில் பிறந்தவரா? குடும்பத்திற்கு செல்வ யோகத்தை கொண்டு வருவார்கள்

44
சினிமாவும் அரசியலும் சந்திக்கும் இடம்
Image Credit : Asianet News

சினிமாவும் அரசியலும் சந்திக்கும் இடம்

ஒரு திரைப்படத்தின் வெளியீடு அரசியல் விவாதங்களுடன் இணைக்கப்படுவது புதிய விஷயம் அல்ல. ஆனால், தமிழகத்தின் தற்போதைய முதல்வராக விஜயின் திரைப்படம் என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சினிமா, அரசியல் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்பது உறுதியாக தெரியவில்லை. அதே நேரத்தில், ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு தொடர்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
ஜன நாயகன்
திரைப்படம்
சினிமா
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Related Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி
Recommended image2
Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved