MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Parimala And Co Movie Day 1 Box Office : பரிமளா அண்ட் கோ முதல் நாளில் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Parimala And Co Movie Day 1 Box Office : பரிமளா அண்ட் கோ முதல் நாளில் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Parimala And Co Box Office : பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்த பரிமளா அண்ட் கோ திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 06 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Parimala And Co Movie Box Office
Image Credit : X

Parimala And Co Movie Box Office

நடிகர் ஜெயராம் - ஊர்வசி ஜோடி ரொம்ப வருஷம் கழித்து மீண்டும் இணைந்து நடித்துள்ள தமிழ் படமான 'பரிமளா அண்ட் கோ' நேற்று உலகம் முழுக்க தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. சூப்பர் ஹிட் தமிழ் பட இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய இந்த படத்தை, GKM தமிழ் குமரன் (தமிழ் குமரன் புரொடக்ஷன்ஸ்) மற்றும் பாண்டிராஜ் (பசங்க ஃபிலிம்ஸ்) இணைந்து தயாரித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தை வழங்குகிறார். படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பரிமளா அண்ட் கோ கதை என்ன?
Image Credit : X

பரிமளா அண்ட் கோ கதை என்ன?

போதைப் பொருளை அழிக்குறது தான் இந்தப் படத்தின் ஒன் லைன். அதை நேராக சொல்லாமல், குடும்பக் கதையோடு சேர்த்து ஒரு ஒலப்பு ஒலப்பி எடுத்துவைத்திருக்கிறார் பாண்டிராஜ். உண்மையாகச் சொல்லப் போனால், அவரிடம் இருந்து இப்படி ஒரு மேக்கிங் பெரிய ஏமாற்றம்தான். ரைட்டிங் சுமார் ரகம்தான். பல காட்சிகள் பேசிக்கொண்டே போகும் மாதிரி இருக்கின்றன. எங்குமே நகைச்சுவை பெரிய அளவில் வேலை செய்யவில்லை. பல காட்சிகள் நீளமாக இருக்கின்றன. அதுவே பல இடங்களில் சலிப்பை உண்டாக்குகிறது. ஜெயராம் மற்றும் ஊர்வசி காம்போ கொடுத்த ஹைப்புக்கு ஏமாற்றம்தான். பூர்ணிமா ரவி கதாபாத்திரம் எதற்கு? அவளுடைய அப்பா கதாபாத்திரம் எல்லாம் வந்த கையோடு மாயமாகிவிடுகிறது. மிஷ்கின் மட்டுமே ஒரே ஆறுதல் மற்றபடி படம் சுமார் ரகம் தான் என்கிற விமர்சனங்கள் தான் அதிகளவில் வந்த வண்ணம் இருக்கின்றன.

Related Articles

Related image1
Parimala And Co Review : பாண்டிராஜின் ‘பரிமளா அன்ட் கோ’ டக்கரா? மக்கரா? முழு விமர்சனம் இதோ
Related image2
பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!
34
பரிமளா அண்ட் கோ வசூல்
Image Credit : X

பரிமளா அண்ட் கோ வசூல்

இந்த நிலையில், பரிமளா அண்ட் கோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படம் இந்தியாவில் ரூ. 1.84 கோடி வசூலித்துள்ளதாம். உலகளவில் இப்படம் 2 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் தளத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கடந்த வாரம் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த பிளாஸ்ட் திரைப்படம் நேற்று மட்டும் ரூ.2.43 கோடி வசூலை வாரிக்குவித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் பரிமளா அண்ட் கோ திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
கலவையான விமர்சனங்களை பெறும் பரிமளா அண்ட் கோ
Image Credit : X

கலவையான விமர்சனங்களை பெறும் பரிமளா அண்ட் கோ

பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தலைவன் தலைவி. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்திருந்த இப்படம், கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலையும் வாரிசுருட்டி இருந்தது. ஆனால் பரிமளா அண்ட் கோ படத்திற்கு முதல் நாளே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், அப்படம் வசூலில் 50 கோடியை தாண்டுமா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி
Recommended image2
Peddi Day 2 Box Office Collection: 2ம் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன பெத்தி... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?
Recommended image3
Siragadikka Aasai : செருப்பால அடிப்பேன்... ரோகிணியை டார் டாராக கிழித்த விஜயா; அதிர்ச்சியில் மனோஜ்
Related Stories
Recommended image1
Parimala And Co Review : பாண்டிராஜின் ‘பரிமளா அன்ட் கோ’ டக்கரா? மக்கரா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved