அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 பாலிவுட் நடிகைகள்!
தீபிகா, கத்ரீனா, ஆலியா, உள்ளிட்ட பல நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்கள். அப்படி பட்ட 10 நடிகைகள் பற்றி பார்ப்போம்.

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் தனது அழகு மற்றும் சிறந்த நடிப்புக்காக அதிகம் அறியப்படுபவர். ஹிந்தியில் 'பத்மாவத்' 'சென்னை எக்ஸ்பிரஸ்' , ஜவான், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், தென்னிந்திய மொழிகளிலும் கல்கி, கோச்சடையான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கத்ரீனா கைஃப்
'ஜிந்தகி நா மிலேகி துபாரா', 'ஏக் தா டைகர்' போன்ற படங்களில் நடித்த கத்ரீனா கைஃபின் தளபதி விஜய்யுடன் கோக் விளம்பரத்தில் நடித்து பிரமிக்க வைத்தவர். மேலும் கடந்த ஆண்டு வெளியான மேரி கிருஸ்துமஸ் படம் மூலம் அதிகம் பிரபலமானவர்.
இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்.. ஒரு படத்திற்கே இவ்வளவா? ஆலியா பட், கரீனா இல்ல..
ஆலியா பட்
ஆலியா பட் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை மயக்கியவர். தென்னிந்திய திரையுலகில் RRR படத்தில் நடித்து பிரபலமானார்.
ஜாக்லின் பெர்னாண்டஸ்
இலங்கையைச் சேர்ந்த ஜாக்லின் பெர்னாண்டஸ் 'கிக்' மற்றும் 'ஜுட்வா 2' போன்ற ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் லெஜெண்ட் படத்தில் நடித்த இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியான டக்கு மஹாராஜ் படத்தில், பாலையாவுடன் டபுடி டபடி என டான்ஸ் ஆடி பிரமிக்க வைத்தார்.
கியாரா அத்வானி
'கபீர் சிங்' மற்றும் 'ஷெர்ஷா' படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான கியாரா அழகில் அனைவரையும் மயங்க செய்பவர். சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அனுஷ்கா சர்மா
'பிகே' மற்றும் 'சுல்தான்' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த அனுஷ்கா சர்மா, விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பின்னர்... தற்போது நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும், ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாக உள்ளார்.
ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர் 'ஆஷிகி 2' மற்றும் 'பாகி' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை வென்றுள்ளார். இதுவரை இவர் எந்த ஒரு தமிழ் படங்களிலும் நடித்தது இல்லை.
தமன்னா பாட்டியா
தனது பால் வண்ண நிறத்தால், பேரழகில் மயக்கும் தமன்னா... கோலிவுட் மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலில் பிரபலம் ஆன பின்னரே பாலிவுட் படங்களில் கால் பதித்து தற்போது கலக்கி வருகிறார்.
ஹுமா குரேஷி
தனது அழகு மற்றும் சிறந்த நடிப்புக்காக அறியப்படும் ஹுமா 'கேங்க்ஸ் ஆஃப் வாசேபூர்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில், 'காலா' படத்தில் நடித்தார் . அதே போல் அஜித்துக்கு ஜோடியாக 'வலிமை' படத்திலும் நடித்தவர் ஆவார்.
மாதுரி தீட்சித்
மாதுரி தீட்சித் 'தில் தோ பாகல் ஹை' போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டின் முன்னாள் நடிகை இவர். 45 வயதை கடந்த பின்னரும் கூட இவர் பிரகாசிக்கும் அழகில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.