- Home
- Gallery
- நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகாலாம் லிஸ்ட்லயே இல்ல.. இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்..
நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகாலாம் லிஸ்ட்லயே இல்ல.. இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்..
IMDB இன் படி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Highest paid actress in bollywood
இந்திய திரையுலகை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகைகள் சில லட்சங்களில் சம்பளம் பெற்றனர். இதை தொடர்ந்து சில முன்னணி நடிகைகள் கோடிகளில் சம்பளம் பெற தொடங்கினர். ஆனால் தற்போது பல நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று வருகின்றனர். ஒரு நடிகையின் சம்பளம் அவரது பாக்ஸ் ஆபிஸ் வெற்றி, பார்வையாளர்களிடையே புகழ், விமர்சன ரீதியான பாராட்டு போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. IMDB இன் படி அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
deepika padukone
தீபிகா படுகோன்
அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பது தீபிகா படுகோன். அவர் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தீபிகா படுகோன் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், பாஜிராவ் மஸ்தானி, ராம் லீலா, பத்மாவத் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். கடைசியாக அவர் நடித்த ஜவான் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
Kangana ranaut
கங்கனா ரனாவத்
பிரபல நடிகை கங்கனா ரனாவத் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 27 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலம் அவர் இந்த படத்தில் 2-வது இடத்தில் இருக்கிறார். க்ரிஷ் 3, தனு வெட்ஸ் மனு, குயின் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சல் பிரதேசத்தின் மந்தி தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது எம்.பியாக உள்ளார்.
Priyanka Chopra
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.. தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் பாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்தார். கூன் மாஃப், பர்ஃபி, மேரி கோம், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து ஹாலிவுட்டில் பல படங்கள், வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அவர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கிறார்.
Katrina Kaif
கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப் ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 25 கோடி வரை சம்பாதிக்கிறார். இதன் மூலம் அவர் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். மைனே பியார் க்யூன் கியா, ஏக் தா டைகர், தூம் 3, பாங் பாங், டைகர் 3 போன்ற அதிரடி பிளாக்பஸ்டர்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார்..
Alia Bhatt
ஆலியா பட்
ஆலியா பட் ஒரு படத்திற்கு 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலம் அவர் இந்த படத்தில் 5-வது இடத்தில் இருக்கிறார்.. ஹைவே, ராஸி, கல்லிபாய், கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்த்ரா போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்.
Kareena Kapoor
கரீனா கபூர் கான்
கரீனா கபூர் கான் ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 18 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறார். . ஜப் வி மெட், 3 இடியட்ஸ், பஜிரங்கி பைஜான், பாடிகார்ட், சிங்கம் ரிட்டன்ஸ், கோல்மால் 3, வீரே தி வெட்டிங் என பல வெற்றி படங்களில் நடித்துள்ள அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
Shraddha Kapoor
ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறார். அவர் திரைப்படத்திற்கு 7 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஆஷிகி 2, ஸ்ட்ரீ, சிச்சோர் போன்ற படங்களில் நடித்துள்ளார்
Vidya Balan
வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 14 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். பா, இஷ்கியா, "தி டர்ட்டி பிக்சர், கஹானி, மங்கள் மிஷன் போன்ற பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்.
Ansuhka Sharma
அனுஷ்கா சர்மா
அனுஷ்கா ஷர்மா ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்..ரப் நே பனா தி ஜோடி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்தார். NH10, சுல்தான், பி.கே. சஞ்சு என பிளாக்பஸ்டர் படங்களில் அவர் நடித்துள்ளார்.
Aishwarya Rai Bachan
ஐஸ்வர்யா ராய் பச்சன்
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானார். எனினும் அவரின் முதல் வெற்றி படம் ஜீன்ஸ் தான். தேவதாஸ், ஜோதா அக்பர், குரு போன்ற வெற்றி படங்களில் அவர் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.