MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'லியோ' படத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு.! டான்ஸ் மாஸ்டர் மீது புகார்

'லியோ' படத்தில் ரூ.35 லட்சம் முறைகேடு.! டான்ஸ் மாஸ்டர் மீது புகார்

‘லியோ’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆயிரம் பேரை ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 03 2025, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது குவியும் புகார்கள்
Image Credit : Google

டான்ஸ் மாஸ்டர் தினேஷ் மீது குவியும் புகார்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லியோ.’ இந்த திரைப்படத்தில் பாடல் ஒன்றில் ஆயிரம் பேரை ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சத்தை வாங்கி அதை முறையீடு செய்ததாக நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக இருக்கும் தினேஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் நடன இயக்குனர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என நடன இயக்குனர்கள் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.

25
தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ்
Image Credit : Google

தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் தினேஷ்

2001-ம் ஆண்டு வெளியான ‘மனதை திருடி விட்டாய்’ படத்தில் நடன இயக்குனராக அறிமுகமானவர் தினேஷ். கடந்த 25 ஆண்டுகளில் 100 படங்களுக்கும் மேல் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பிரபுதேவாவின் தந்தை நடன இயக்குனர் ராஜு சுந்தரமின் நடனக் குழுவில் பணியாற்றிய இவர், பிரபு தேவாவின் அண்ணன் நாகேந்திர பிரசாத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். பிரபுதேவாவின் நடனக் குழுவிலும் மிகச்சிறந்த நடனக் கலைஞராக இருந்தார். 2011-ல் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதையும் பெற்றார்.

Related Articles

Related image1
'தக் லைப்' திரைப்படத்தால் விஜயின் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் எழுந்த புது சிக்கல்
Related image2
விவகாரத்தில் முடிந்த முதல் திருமணம், இரண்டாவது கணவர் மரணம்.. விஜய் பட நடிகையின் சோகம்
35
ரூ.35 லட்சத்தை ஏமாற்றியதாக தினூஷ் மீது குற்றச்சாட்டு
Image Credit : Google

ரூ.35 லட்சத்தை ஏமாற்றியதாக தினூஷ் மீது குற்றச்சாட்டு

‘அயன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கான சிறந்த நடன இயக்குனருக்கான ஃபிலிம்பேர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. நடனம் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டும் வரும் இவர், ‘லோக்கல் சரக்கு’, ‘நின்னு விளையாடு’, ‘ஒரு குப்பை கதை’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். நடன இயக்குனர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கும் இவர் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ‘லியோ’ படத்தில் வரும் “நான் ரெடி தான் வரவா…” பாடலுக்கு ஆயிரம் பேரை நடனம் ஆட வைப்பதாக கூறி ரூ.35 லட்சம் தினேஷ் பெற்றுள்ளார்.

45
கைகலப்பில் முடிந்த நடன இயக்குனர் சங்க பொதுக்குழு
Image Credit : Google

கைகலப்பில் முடிந்த நடன இயக்குனர் சங்க பொதுக்குழு

ஆனால் அந்தப் பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் தினேஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் நடன இயக்குனராக இருக்கும் மாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தினேஷ் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் பதவி விலக வேண்டும் என கூறிய நடன இயக்குனர் கௌரிசங்கர் மீது தினேஷ் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதலும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் நடன இயக்குனர் சங்கத்தின் துணைத் தலைவரான கல்யாண் மாஸ்டர் தலைமையில் பொதுக்குழு கூடியுள்ளது.

55
தினேஷ் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்
Image Credit : Google

தினேஷ் பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டம்

இப்போது அங்கு வந்த தினேஷ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கல்யாண் மாஸ்டர் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கல்யாண் மாஸ்டர் தரப்பினர் நடன இயக்குனர் சங்கத்தின் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தியாகராய நகர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தினேஷ் மாஸ்டர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கல்யாண் மாஸ்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அறிவுக்கரசிக்கு ஆப்பு வைத்த ஆதி குணசேகரன்... தர்ணாவில் இறங்கும் தர்ஷினி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
Thaai Kizhavi Radhika: சினிமாவில் நான் பட்ட அவமானத்திற்கு மருந்து கிடைத்துவிட்டது! மேடையில் உருகிய "தாய்கிழவி" ராதிகா!
Recommended image3
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த மீனா... அம்பலமான சிந்தாமணியின் சதி - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
'தக் லைப்' திரைப்படத்தால் விஜயின் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் எழுந்த புது சிக்கல்
Recommended image2
விவகாரத்தில் முடிந்த முதல் திருமணம், இரண்டாவது கணவர் மரணம்.. விஜய் பட நடிகையின் சோகம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved