- Home
- Cinema
- D Imman : நாயோடு ஒப்பிட்டு இசையமைப்பாளர் டி இமானை நோஸ் கட் செய்த மாஜி மனைவி - வைரலாகும் டுவிட்டர் பதிவு
D Imman : நாயோடு ஒப்பிட்டு இசையமைப்பாளர் டி இமானை நோஸ் கட் செய்த மாஜி மனைவி - வைரலாகும் டுவிட்டர் பதிவு
D Imman : டி இமானை பங்கமாக கலாய்க்கும் விதமாக மோனிகா போட்டுள்ள டுவிட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் டி இமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் எமிலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் டி.இமான். விவாகரத்து செய்த ஆறே மாதத்தில் மறுமணம் செய்துகொண்ட இமானை அவரது மாஜி மனைவி மோனிகா டுவிட்டரில் கடுமையாக சாடினார்.
இதையடுத்து 2-வது திருமணம் குறித்து பதிவிட்டிருந்த இமான், கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக தனது மறுமணம் அமைந்ததாகவும், எமிலியின் மகள் நேத்ராவை தனது மூன்றாவது மகளாக ஏற்றுக்கொள்வதாகவும், அதே வேளையில் தனது மகள்களை மிஸ் பண்ணுவதாகவும், அவர்களுக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் உருக்கமாக பதிவிட்டிருந்தார். மேலும் எமிலியின் பெரிய குடும்பத்தில் தன்னை சேர்த்துக்கொண்டதற்காக நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டி இமானின் இந்த பதிவை விமர்சிக்கும் விதமாக அவரின் மாஜி மனைவி மோனிகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாயோடு ஒப்பிட்டு அவர் அந்த பதிவை போட்டுள்ளார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பம் சந்தித்து வந்த இன்னல்களுக்கு தீர்வு காணும் விதமாக இந்த நாய்களின் வருகை அமைந்ததாகவும், இந்த இரண்டு நாய்களையும் தனது மூன்றாவது மற்றும் நான்காவது மகள்களாக ஏற்றுக்கொள்வதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தானும், தனது மகள்களும் உண்மையான அன்பையும், சந்தோஷத்தையும் நீண்ட நாடகளாக மிஸ் பண்ணியதாகவும், இந்த இரண்டு நாய்களும் விஸ்வாசத்துடன் இருக்கும் என நம்புவதாகவும் விலைமதிப்பற்ற அன்பை கொடுக்கும் டால்மேஷன் (நாய் வகை) குடும்பத்திற்கு எங்களது நன்றி என பதிவிட்டுள்ளார் மோனிகா. டி இமானை பங்கமாக கலாய்க்கும் விதமாக மோனிகா போட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... D Imman : ச்சீ.. உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு... டி இமானின் மறுமணத்தால் முதல் மனைவி குமுறல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.