D Imman : ச்சீ.. உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு... டி இமானின் மறுமணத்தால் முதல் மனைவி குமுறல்
D Imman : மறுமணம் செய்துகொண்ட இசையமைப்பாளர் டி. இமானுக்கு அவரது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டு, டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி. இமான். அஜித், விஜய், சூர்யா, ரஜினி போன்ற முன்ன்ணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலுக்கு இசையமைத்ததற்காக தேசிய விருதும் பெற்றார்.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்த இத்தம்பதி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் டி.இமான். அவர் மறைந்த கலை இயக்குனர் உபால்டுவின் மகள் எமிலி என்பவரை மறுமணம் செய்துள்ளார். எமிலியின் மகளை தனது 3-வது மகளாக ஏற்றுக்கொண்டதாகவும் இமான் கூறி இருந்தார். அவரின் மறுமண புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களும் குவிந்தன.
இந்நிலையில், மறுமணம் செய்துகொண்ட இமானுக்கு அவரது முதல் மனைவி மோனிகா, டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது : டியர் இமான், உங்களின் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். உங்களுடன் 12 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை உடனடியாக உங்களால் மாற்றிவிட முடியும் என்றால், உன்ன மாதிரி ஆள்கூட 12 வருஷம் வாழ்ந்தேன் பாரு.. நான் ஒரு முட்டாள்.
கடந்த 2 ஆண்டுகளாக உங்களின் சொந்த மகள்களை நீங்கள் பார்க்கவோ, கவனிக்கவோ இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலாகவும் ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஆச்சர்யமாக உள்ளது. உன் அப்பாவிடம் இருந்து என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன், தேவைப்பட்டால் அந்த புதுக் குழந்தையையும் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Beast Trolls : ‘பீஸ்ட்’ படத்தை பிரித்தெடுத்த நெட்டிசன்கள்... களத்தில் இறங்கி காப்பாற்றிய நெட்பிளிக்ஸ்