- Home
- Cinema
- ஸ்டாலினுக்காக அப்பல்லோ முன்பு திருஷ்டி பூசணி பூஜை.. நாளை பாதயாத்திரை! உடன்பிறப்புகளை விஞ்சும் கூல் சுரேஷ்
ஸ்டாலினுக்காக அப்பல்லோ முன்பு திருஷ்டி பூசணி பூஜை.. நாளை பாதயாத்திரை! உடன்பிறப்புகளை விஞ்சும் கூல் சுரேஷ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நலம் பெற வேண்டி திருஷ்டி சுத்தி அப்பல்லோ மருத்துவமனை முன் தேங்காய் உடைத்துள்ளார் நடிகர் கூல் சுரேஷ்.

Cool Suresh Perform Pooja for MK Stalin
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் நலம்பெற வேண்டி நடிகர் கூல் சுரேஷ், அவரின் புகைப்படத்திற்கு பொட்டு வைத்து திருஷ்டி சுத்தி போட்டிருக்கிறார். கனவில் அவருக்கு திருஷ்டி இருப்பது தெரியவந்ததால் அதை எடுக்க இன்று அப்பல்லோ வந்ததாக கூறி இருக்கிறார் கூல் குரேஷ். மேலும் முதல்வர் நலம்பெற வேண்டி நாளை திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை செல்ல உள்ளதாகவும் கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.
திருஷ்டி சுத்திய கூல் சுரேஷ்
அவர் பேசியதாவது : எனக்கு நேற்று தூங்கும் போது கனவு வந்தது. எனக்கு தெய்வ பக்தி ஜாஸ்தி. அந்த கனவில் மு.க.ஸ்டாலினுக்கு திருஷ்டி நிறையா இருப்பது தெரிந்தது. நிறைய பேரின் கண்பட்டுள்ளது. அதனால் இன்று காலை எழுந்தவுடன் முதல்வருக்கு திருஷ்டி சுத்த வேண்டும் என்பதற்காக தடியங்காய், தேங்காய் அதுமட்டுமில்ல அவர் பூரண நலம் பெற வேண்டி வட பழனி முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்தேன்.
ஸ்டாலின் அவர்களின் உடல்நிலை நன்றாக தான் இருக்கிறது என்று காவல்துறையும், மருத்துவர்களும் கூறி இருக்கிறார்கள். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம், யாரும் அவருக்கு இடையூறு கொடுக்க வேண்டாம் என்று சொன்னதால் நான் உள்ளே செல்லவில்லை. மருத்துவமனை வெளியிலேயே நின்று திருஷ்டியை கழிச்சுட்டேன். இனி 100 ஆண்டுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நீடூடி வாழவார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை
இப்போ நான் வந்ததை வைத்து என்மீது அரசியல் சாயம் பூசி விடாதீர்கள். கூல் சுரேஷ் கட்சியின் சார்பாக இன்று நான் முதல்வரை பார்க்க வரல, ஒரு தமிழனாக, இந்தியனாக, தமிழ்நாட்டின் முதலமைச்சர் நல்லா இருக்கனும் என்பதற்காக தான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அவருக்கு திருஷ்டி எடுப்பதற்காக வந்தேன். நாளை அவர் உடல்நலம்பெற வேண்டி திருவண்ணாமலைக்கு பாத யாத்திரை செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறேன்.
முதல்வரை விமர்சனம் செய்யாதீர்கள்
இவை அனைத்தும் ஒரு தமிழனாக, முதலமைச்சருக்கு நான் செய்ய வேண்டிய கடமை. சமூக வலைதளங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்காதீர்கள். அவரை யாரும் குறை சொல்லாதீர்கள். அவர் நீடூடி வாழனும். நேற்று ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள். ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்வார்கள். அதேபோல் ஸ்டாலினின் வெற்றிக்கு பின்னால் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் இருக்கிறார்” என்று கூல் சுரேஷ் பேசினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

