‘ஏன் இவ்ளோ சீக்கிரம் என்ன விட்டு போன’ திடீரென மரணமடைந்த அம்மா... குக் வித் கோமாளி பவித்ரா போட்ட எமோஷனல் பதிவு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி, அவரது தாயின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் எமோஷனலாக பதிவிட்டு உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் செய்த காமெடி கலாட்டா ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கியது. அந்நிகழ்ச்சியில் பைனல் வரை சென்று அசத்தினார் பவித்ரா. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை பவித்ரா லட்சுமிக்கு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
அந்த வகையில் அவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் நாய்சேகர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பவித்ரா. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது. இதையடுத்து மலையாளத்தில் உல்லாசம், அதிருஷ்யம், யுகி போன்ற படங்களில் நடித்தார் பவித்ரா. இதுதவிர ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை பவித்ரா லட்சுமியின் அம்மா கடந்த வாரம் மரணமடைந்து இருக்கிறார். தாயின் மரணம் குறித்து முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை போட்டுள்ள நடிகை பவித்ராவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த பதிவில் பவித்ரா குறிப்பிட்டுள்ளதாவது : “நீ என்னைவிட்டு பிரிந்து சென்று 7 நாட்கள் ஆகிறது. ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு பிரிந்து சென்றாய் என எனக்கு புரியவில்லை.
இதையும் படியுங்கள்... Hansika : டேட்டிங் அழைத்து டார்ச்சர் செய்தாரா பிரபல ஹீரோ? - விஷயம் லீக் ஆனதால் உண்மையை போட்டுடைத்த ஹன்சிகா
கடந்த 5 வருடங்களாக நீ அனுபவித்த வந்த வலியும், வேதனையும் இனி உனக்கு இல்லை என்பதே எனக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம். நீ எப்போதும் ஒரு சூப்பர்மாம், உண்மையில் சூப்பர் வுமன். ஒற்றை பெற்றோராக இருப்பது எளிதான வேலை அல்ல, ஆனால் நீங்கள் அதை எல்லா வழிகளிலும் சிறப்பாக செய்தீர்கள். உங்களுடன் சேர்ந்து பேச வேண்டும், சாப்பிட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அதற்கு வழியே இல்லை. தயவு செய்து எப்போதும் என் பக்கம் இருங்கள்.
இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி, நீங்கள் இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன் என தெரியவில்லை. என் அம்மாவின் கடைசி காலங்களில் அவருக்கு மிகவும் பிடித்தவனாக ஆதி இருந்தான். என்னைவிட உன்னை தான் அவங்களுக்கு பிடிக்கும். நான் தவறவிட்ட நாட்களில் அவர்களை சிரிக்க வைத்ததற்கு நன்றி. என் அம்மாவுக்கு மகன் இல்லை. ஆனால் நீயும், விக்னேஷும் அவரது மகன்களாக இருந்தீர்கள். அவர் எப்போதும் உங்களை ஆசிர்வதிப்பார்” என பதிவிட்டுள்ளார்.
பவித்ராவின் இந்த பதிவை பார்த்து கலங்கிப்போன குக் வித் கோமாளி புகழ், பவி மன்னிச்சிக்கோ கடைசி வரைக்கும் அம்மாவை பார்க்க வரமுடியல என்ன மன்னிசுடு. அம்மா எப்பவும் உன் கூட தான் இருப்பாங்க. நானும் பென்சியும் சாகுற வரைக்கும் உன் கூட இருப்போம். உனக்கு இந்த இழப்பு மிகப்பெரியது. உன் உலகமே அம்மா மட்டும் தான். நீ நல்லா இருக்கனும் அதான் அம்மாவோட ஆசை” என கமெண்ட் செய்துள்ளார். இதுதவிர ஏராளமான பிரபலங்களும், ரசிகர்களும் பவித்ராவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிசினஸில் படு பிசியான அஜித்... தள்ளிப்போன விடாமுயற்சி ஷூட்டிங் - எப்போ ஆரம்பம் தெரியுமா?