பிசினஸில் படு பிசியான அஜித்... தள்ளிப்போன விடாமுயற்சி ஷூட்டிங் - எப்போ ஆரம்பம் தெரியுமா?
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
துணிவு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் விடாமுயற்சி. அஜித்தின் 62-வது படமான இதனை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். விடாமுயற்சி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியானது.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை கடந்த மார்ச் மாதமே தொடங்க இருந்தனர். அந்த சமயத்தில் நடிகர் அஜித்தின் தந்தை காலமானதால், அப்படத்தின் ஷூட்டிங்கை தள்ளிப்போட்டனர். இதையடுத்து ஏப்ரல் மாதம் அப்பட ஷூட்டிங் ஆரம்பமாகும் என கூறப்பட்டது. ஆனால் அஜித் தன் உலக பைக் சுற்றுலாவை அம்மாதம் மேற்கொண்டதால் மே மாதத்திற்கு ஷூட்டிங்கை தள்ளிவைத்தனர். தற்போதைய நிலவரப்படி மே மாதமும் இப்பட ஷூட்டிங் ஆரம்பமாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மஞ்சு வாரியர் புதிய படம் திரிச்சூரில் கோலாகலமாக துவங்கியது !!
மே 22-ந் தேதி அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அன்றைய தினம் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீர் டுவிஸ்டாக தான் புதிதாக தொடங்கி உள்ள தொழில் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அஜித். ஏகே மோட்டோ ரைடு என்கிற அந்நிறுவனம் சர்வதேச அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும்.
அஜித் பிசினஸில் பிசியானதால் இம்மாதமும் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாம். ஜூன் மாத இறுதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித் புதிய தோற்றத்தில் காட்சியளிப்பார் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் அந்த புதுலுக்கை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... 68 வயதிலும் ஃபேஷன் உடையில் அதிரவிடும் ஆண்டவர்! கமல்ஹாசனின் நியூ போட்டோ ஷூட் வைரல்!