'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு விரைவில் டும்.. டும்.. டும்! மணமகள் யார் தெரியுமா? குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம், பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்குள் நுழைய பலர் கடும் முயற்ச்சி செய்து வந்தாலும், எளிதில் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. அப்படியே ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், முதல் படத்திலேயே ஹீரோவாக நடிப்பது என்பது பலருக்கும் சாத்தியம் இல்லாத ஒன்று. இன்று வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சூரி, உள்ளிட்ட பலர் சிறு சிறு வேடங்களில் நடித்து, பின்னரே ஹீரோவாக நடிக்கும் பட வாய்ப்புகளை கைப்பற்றினர்.
ஆனால் சமீப காலமாக சிலர், பிக்பாஸ் நிகழ்ச்சி, மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி, பின்னர் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் சிலருக்கு கை கொடுத்திருந்தாலும்,பலரை கைவிட்டு விடுகிறது என்பதே உண்மை.
'ஜவான்' படத்தில் ஷாரூக்கானுடன் ஐட்டம் டான்ஸ் ஆட பிரியா மணி எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா?
அந்த வகையில் 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமானவர் தான் அஸ்வின். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் மாடலாக நடித்து வந்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான, சில சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னர் குக் வித் கோமாளி மூலம் பலரும் அறியும் நபராக மாறினார். இதன்பிறகு இவர் நடித்த ஆல்பம் சாங் ஹிட் அடித்தது. இதையடுத்து பட வாய்ப்பு கிடைக்க... 40 படங்களின் கதையை கேட்டு தூங்கி விட்டதாக இவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு படம் மட்டுமே ஹீரோவாக நடித்து விட்டு, இவ்வளவு மமதை ஆகாது என விமர்சனங்கள் பறக்க பின்னர் கொஞ்சம் அடக்கி வாசிக்க துவங்கினார். முதல் படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்தாலும் , இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில், அஸ்வின் நடித்த 'செம்பி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இவர், பிரபல தயாரிப்பாளரின் மகளை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த தயாரிப்பாளர் யார்? மற்றும் அந்த பெண்ணின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து அஸ்வினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.