பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் சர்ச்சை நடிகை? எப்போது துவங்குகிறது நிகழ்ச்சி... பரபரப்பு தகவல்!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது நிகழ்ச்சி ஆரம்பமாகும் தேதி குறித்தும், இதில் புதிதாக இணைந்துள்ள போட்டியாளர் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பிக்பாஸ்', நிகழ்ச்சி. வெற்றிகரமாக 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் 6-வைத்து சீசனை துவங்க நிகழ்ச்சியாளர்கள் தயாராகி உள்ளனர்.
அவ்வபோது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்தும், இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றியும் தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட சர்ச்சை நடிகை ஒருவர்.
மேலும் செய்திகள்: திரையுலகில் அதிர்ச்சி... பிரபல இயக்குனர் புற்றுநோயால் மரணம்!
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், கடந்த ஒரு சில மாதங்களாக சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் சீரியல் நடிகை ஸ்ரீநிதி. பின்னர் திடீர் என சிம்புவை அண்ணா என கூப்பிட்டு அந்தர் பல்டி அடித்தார். அதே போல் தன்னுடைய தோழியான பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா பற்றியும் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்ரீநிதி.
தற்போது சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் இவரிடம், பிக பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூறி நிகழ்ச்சியாளர்கள் அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியில் இணைந்தால் கண்டிப்பாக பரபரப்பான கன்டென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: அடுத்தடுத்த தோல்வி படம்... மளமளவென குறைந்த சூப்பர் ஸ்டார் சம்பளம்! வெளியான 'ஜெயிலர்' பட சம்பள விவகாரம்!
இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களில், மிகவும் டல்லாக சென்றது என்றால் அது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி எனலாம். இந்த நிகழ்ச்சி இவ்வளவு டல்லாக சென்றதற்கு முக்கிய காரணம், இதில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் அதிகம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் இல்லை. எனவே சீசன் 6 நிகழ்ச்சி போட்டியாளர்கள் தேர்வில் அதிக கவனம் காட்டி வருகிறார்களாம் நிகழ்ச்சியாளர்கள்.
எனவே இந்த முறை, கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலங்கள் சிலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி , தொகுப்பாளர் ரக்ஷன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, பிரபல பாடகி சுசியின் முன்னாள் கணவர் கார்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த பட்டியலில் ஸ்ரீநிதியும் இணைந்துள்ளார்.
மேலும் செய்திகள்: இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், இந்த சீசனை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளதாக சில உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.