இதில் கூடவா? கவர்ச்சி காட்டுவதில் கூட யாஷிகாவை அட்டை காப்பி அடித்த ஐஸ்வர்யா தத்தா! வச்சு செய்யும் நெட்டிசன்கள்
யாஷிகாவை அட்டை காப்பி அடிப்பது போல், அவர் அணிந்து போலவே கவர்ச்சி உடை அணிந்து... அவரை போலவே நீச்சல் குளத்தில் நின்று போஸ் கொடுத்தது போலவே ஐஸ்வர்யா தத்தா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவருமே பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறியவர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இவர்கள் இருவருக்குமே, அவர்களது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வந்தது.
மேலும் செய்திகள்: நடிகருடன் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்..! வைரலாகும் வீடியோ..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யாஷிகா வெளியேற முக்கிய காரணங்களில் ஒன்று, அவர் தன்னுடைய தோழியான ஐஸ்வர்யா தத்தா, தவறு செய்தலும் அதற்கிக்கு ஓவராக சப்போர்ட் செய்தது தான்.
yashika annand
இதனால் ஒரு கட்டத்தில், ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி குறைவான வாக்குகளுடன்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
மேலும் செய்திகள்: கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!
ஆனால் நடிகை ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாட்களுக்கு மேல் இருந்து 2-வது வெற்றியாளராக மாறினார். முதல் இடத்தை, நடிகை ரித்விகா கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு... தொடர்ந்து தோழிகள் இருவருமே பார்ட்டிக்கு செல்வது, விதவிதமான கவர்ச்சி உடைகளில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்: அன்புசெழியன் யார்.. எப்படி பட்டவர்? தயாரிப்பாளர் கே.ராஜன் கூறிய விளக்கம்!
அந்த வகையில் தற்போது பச்சை நிற பிகினி உடையில், யாஷிகா வெளியிட்ட புகைப்படம் போன்றே... நீச்சல் குளத்தில் நின்றபடி தற்போது ஐஸ்வர்யா தத்தா புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், யாஷிகாவை அட்டை காப்பி அடித்து... ஐஸ்வர்யா தத்தா போஸ் கொடுத்துள்ளதாக விமர்சித்து வச்சி செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தாறுமாறாக தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.