நடிகருடன் விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்..! வைரலாகும் வீடியோ..!
விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினி கவுடாவுக்கும், தொலைக்காட்சி நடிகருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கன்னடம், தெலுங்கு, மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சீரியல் நடிகர் தேஜஸ்வினி கவுடா. 2018 ஆம் ஆண்டு விக்னேஷ் ராவ் தயாரித்த 'வீணா பொன்னப்பாவுடன் பிலி ஹெந்தி' என்கிற கன்னட சீரியல் மூலம் தொலைக்காட்சித் துறையில் சீரியல் நடிகையாக தேஜஸ்வினி அறிமுகமானார். இதில் அஷ்வந்த் திலக், பிரவீன், சாய் கிரண், சுபலட்சுமி ரங்கன் மற்றும் சஹானா போன்ற பலர் நடித்திருந்தனர்.
இதை தொடர்ந்து இவர் தமிழில் விஜய் டிவியில், ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்கிற தொடரில் வினோத் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. சீரியலை தொடர்ந்து மாடலாகவும் இருக்கும் தேஜஸ்வினி, தமிழில் அடுத்தடுத்து சீரியல்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்: அன்புசெழியன் யார்.. எப்படி பட்டவர்? தயாரிப்பாளர் கே.ராஜன் கூறிய விளக்கம்!
அந்த வகையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர் 1 ' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காத பெண்ணான வித்தியா தன்னுடைய புத்திசாலி தனத்தால் என்னென்ன செய்கிறார்... என்பதை கதைக்களமாக வைத்து இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. சீரியலில் மிகவும் பிசியாக நடித்து வரும் இவருக்கும், சீரியல் நடிகருக்கும் திடீர் என திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுகுறித்த வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!
இது தொடர்பான வீடியோவை தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான அரியானா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ஆச்சர்யத்தில் இருக்கும் ரசிகர்கள்.. என்ன இது? அமருக்கும் தேஜுவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பலர் இவர்களது திடீர் திருமண நிச்சயதார்தத்துக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அமர்தீப் சவுதிரி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடியவர். தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.