MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அன்புசெழியன் யார்.. எப்படி பட்டவர்? தயாரிப்பாளர் கே.ராஜன் கூறிய விளக்கம்!

அன்புசெழியன் யார்.. எப்படி பட்டவர்? தயாரிப்பாளர் கே.ராஜன் கூறிய விளக்கம்!

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு மற்றும் அலுவலகங்களில், மூன்றாவது நாளாக இன்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அன்புச் செழியன் யார்? எப்படிப்பட்டவர் என்பது குறித்து, பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் விளக்கம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 04 2022, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், அவருடைய சகோதரர் அழகர்சாமியின் வீட்டிலும், அன்புசெழியனுக்கு  எனக்கு நெருக்கமாக உள்ளவர்கள் வீட்டிலும் இந்த சோதனை தற்போது நடந்து வருகிறது.
 

25

சென்னை மட்டும் இல்லாமல் மதுரையிலும் அன்புசெழியனுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பாக மேலமாசி வீதியில் உள்ள அவருக்கு சொந்தமான அலுவலகம், கீழத்துரை பகுதியில் உள்ள வீடு, செல்லூர் பகுதியில் உள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் அன்புசெழியனுக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து, சினிமா பணிகளுக்காக சாக்கு முட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 கோடி ரூபாய் பணத்தை  வருமான வரி துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!
 

35

ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு, 'பிகில்' திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின் அடிப்படையில், ஏஜிஎஸ் சினிமாஸ், நடிகர் விஜயின் வீடு மற்றும் பைனான்சியர் அன்புசெழியனுக்கு  சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரிசையில் துறையினர் சோதனை நடத்தியதில், சுமார் 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

45

இப்படி அடிக்கடி பரபரப்புகளில் சிக்கி வரும் அன்புசெழியன் யார்? என்பது குறித்தும் எப்படிப்பட்டவர் என்பது குறித்தும் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் கூறியுள்ளார். "இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்களுக்கு மிகவும் குறைந்த வட்டியில் பணம் தருபவர் தான் அன்புச்செல்வன். அவரால் பல படங்கள் பல தட்டுப்பாடு இன்றி எடுக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்: கைவசம் தொழில் இருக்கு... கடை வச்சுக்கூட பொழச்சுக்குவேன்! இதற்க்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன் சாய்பல்லவி கறார்!
 

55

தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களையும், நிதி நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த சமயத்தில், அன்புசெழியன் போன்றவர்கள் தான் மிகக் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்து தயாரிப்பாளர்களுக்கு பேர் உதவியாக இருந்து வருகின்றனர். இருப்பினும், அன்புசெழியனிடம் பல பேர் உதவி பெற்று, பின்னர் பணம் கொடுக்க முடியாத சூழல் காரணமாக ஏமாற்றி உள்ளனர். இப்படி தயாரிப்பாளர்கள் பல கஷ்டங்களை அனுபவித்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர், அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடத்துவது சரியல்ல என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
ராதாவாக மாறிய உதய சந்திரா - எப்படி, எதற்காக? யாருக்கும் தெரியாத உண்மை கதை இதோ!
Recommended image2
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Recommended image3
Youth Review : முதல் படத்திலேயே சிக்சர் அடித்தாரா கென்? யூத் விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved