கமல்ஹாசன் - சிம்பு இணையும் திரைப்படம்..! இயக்குனர் யார்? தீயாய் பரவும் தகவல்!
உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிக்க உள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
'விக்ரம்' படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பின்னர், புது புத்துணர்ச்சியோடு அடுத்தடுத்த பட பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகர் கமலஹாசன். படம் நடிப்பது ஒரு புறம் இருக்க, தன்னுடைய ராஜ் கமல் பட நிறுவன மூலம்... சில படங்களை தயாரிக்கவும் உள்ளார்.
அந்த வகையில் கமல்ஹாசன் தயாரிக்கும் 51 வது திரைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 52 ஆவது படத்தைதன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தானே தயாரித்து கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார்.
மேலும் செய்திகள்: அன்புசெழியன் யார்.. எப்படி பட்டவர்? தயாரிப்பாளர் கே.ராஜன் கூறிய விளக்கம்!
இதைத்தொடர்ந்து, சமீபத்து கமலஹாசனின் 54 வது தயாரிப்பு படம் குறித்த தகவல் வெளியானது. இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்க உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவல் வெளியானது முதலே... கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாக உள்ள 53 வது படம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். கமல்ஹாசன் இந்த படத்திலும் நடிப்பாரா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள்: வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய சூர்யா - கார்த்தி..! தேவதை போல் வந்த அதிதி... 'விருமன்' ஆடியோ லான்ச் போட்டோஸ்!
கமலஹாசனின் 53 வது தயாரிப்பு படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வரும் நிலையில், விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.