MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Gopi sudhakar : கோபி, சுதாகரின் யூடியூப் சேனலுக்கு தடையா?... வடக்கன்ஸ் வீடியோவால் கிளம்பிய புது சிக்கல்

Gopi sudhakar : கோபி, சுதாகரின் யூடியூப் சேனலுக்கு தடையா?... வடக்கன்ஸ் வீடியோவால் கிளம்பிய புது சிக்கல்

யூடியூப் பிரபலங்களான கோபியும், சுதாகரும், வட மாநில தொழிலாளர்களை கிண்டலடித்து வெளியிட்ட வீடியோவால் தற்போது அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 07 2023, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

யூடியூப்பில் ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனவர்கள் கோபி - சுதாகர். ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வந்த இவர்கள், பின்னர் பரிதாபங்கள் என்கிற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில், விதவிதமான ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டனர். இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் யூடியூபில் 30 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைபர்களும் இவர்களுக்கு உள்ளனர்.

24

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் வடக்கு ரயில் பாவங்கள் என்கிற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் வந்து குறைந்த சம்பளத்தில் வேலைபார்ப்பதையும், அவர்கள் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் திருட்டுத்தனமாக பயணிப்பதையும் சுட்டிக்காட்டி, அவர்களை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ யூடியூப்பில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... சந்தோஷ் நாராயணன் உடன் சண்டை... சார்பட்டா 2-விற்காக இசையமைப்பாளரை அதிரடியாக மாற்றும் பா.இரஞ்சித்?

34

இந்த வீடியோ தான் தற்போது அவர்களுக்கு தலைவலியாகவும் மாறி உள்ளது. தற்போது தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி எழுந்துள்ள பிரச்சனைக்கு இவர்கள் வெளியிட்ட இந்த வீடியோ தான் காரணம் எனக்கூறி அவர்களது யூடியூப் சேனலை தடை செய்யக்கோரி பாஜகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

44

அதுமட்டுமின்றி கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், கோபி சுதாகரின் யூடியூப் சேனலை தடை செய்து அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு சில இடங்களில் நடக்கும் தவறுகளினால் ஒட்டுமொத்த வடமாநில தொழிலாளர்கள் மீதும் வன்மத்தை ஏற்படுத்துவது என்பது தவறானது என்றும் அவர்கள் இருவர் மீதும் நடவடிக்க எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த வடக்கன் வீடியோவால் கோபி சுதாகரின் யூடியூப் சேனலுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் விஏ துரையிடம் 25 லட்சத்தை அபேஸ் செய்த இயக்குனர் பாலா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனிமேல் நான் தான் இந்த வீட்டு மருமகள்! கோர்ட் ஆர்டருடன் வந்த ஆனந்தி - அதிர்ச்சியில் லலிதா!
Recommended image2
Now Playing
Thaai Kizhavi Movie Review | தாய் கிழவி திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் இதோ !
Recommended image3
மகளைக் கண்டுபிடித்த விக்ரம்! நிலா தான் தன் மகள் எனத் தெரிந்ததும் விக்ரம் எடுத்த அதிரடி முடிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved