பிரபல காமெடி நடிகர் கவலைக்கிடம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
பிரபல காமெடி நடிகர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான ராஜு ஸ்ரீவஸ்தவா, கடந்த புதன்கிழமை அன்று , புது தில்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீர் என ஏற்பட்ட லேசான மாரடைப்பு காரணமாக கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள்.
நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதன் மூலம் மிகவும் பிரபலமானவர். பாலிவுட் திரையுலகில் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
மேலும் செய்திகள்: விஜய்யின் 6 வயதில்... அவரது தந்தைக்கு இரண்டாவது முறையாக நடந்த திருமணம்..! வைரலாகும் புகைப்படம்!
மருத்துவமனையில் அனுமதித்த போது, சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
மாரடைப்பு ஏற்பட்டு, 2 நாட்கள் ஆகும் நிலையில்... தற்போது வரை அவர் சுயநினைவு இன்றி இருப்பதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பலர் தங்களுடைய வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல்களை முன் வைத்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: ஏடாகூடமாக புடவையை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு படு மோசமாக போஸ் கொடுத்த 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன்!