விஜய் தலையில விக் இருக்கானு பார்க்காதீங்க... சரக்கு இருக்கான்னு பாருங்க! தளபதி பற்றி பிரபலம் சொன்ன ஷாக் தகவல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.
vijay
நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளது தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. தனது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் கல்வி ஊக்கத்தொகை வழங்கி கெளரவித்தார். இதில் சூசகமாக அவர் பேசிய அரசியல் பேச்சும் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்தது. விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Meesai Rajendran
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து பிரபலமான நடிகர் மீசை ராஜேந்திரன், நடிகர் விஜய் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “விஜய்யின் சமீபத்திய நகர்வுகள் மூலம் அவர் அரசியலுக்கு நுழைய தயாராகிவிட்டார் என்பது தெரிகிறது. அது தப்பில்ல, நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல.
vijay
ஆனால், இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கென்று ஒரு மாஸ் இருக்கிறது. ஆனால் அவர் ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பாரா என்பது சந்தேகம் தான். தற்போது இருக்கும் கட்சிகளின் ஓட்டை வேண்டுமென்றால் அவர் பிரிப்பாரே தவிர ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை. பாஜக உடன் கூட்டணி போடுவார்னு நினைக்கிறேன்.
இதையும் படியுங்கள்... ஷாலினி முதல் அசின் வரை... கல்யாணம் ஆனதும் சினிமாவில் இருந்து விலகி குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகைகள்
Meesai Rajendran
விஜய் ரசிகர்களை மட்டுமே நம்பி இருக்கிறார். சக நடிகர்களுடனே கனெக்ட் ஆகாத விஜய், எப்படி மக்களிடம் கனெக்ட் ஆவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்பவுமே தனிமையாக தான் இருப்பார். அவருக்கு நெருக்கமானவர்கள் யாரையும் அவரிடம் நெருங்கவிட மாட்டார்கள். மேடையில் பேசியதை அரசியலில் நிஜமாக்குவது விஜய்க்கு ரொம்ப கஷ்டம்.
vijay
விஜய்க்கு பேச்சுத்திறமை இருக்கிறதா என்றால் அது சந்தேகம் தான். விஜய்க்கு தலையில் விக் இருக்கா இல்லையான்னு யோசிக்கக்கூடாது அவர் தலையில் சரக்கு இருக்கான்னு பாருங்க. நடிகர்கள் தலையில் முடி இருக்கா இல்லையா என்று பார்ப்பதே தப்பு, நடிப்பு தான் முக்கியம். இதெல்லாம் சர்ச்சையான விஷயமே கிடையாது. ரஜினி சாரே அதை யோசிக்காமல் வழுக்கை தலையுடன் தான் நடித்து வருகிறார்” என்று அவர் பேசினார்.
இதையும் படியுங்கள்... யோகிபாபு இல்ல ஆனா இந்த காமெடி நடிகர் இருக்காராம்... விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்