- Home
- Cinema
- பணக்கார காதல் ஜோடி இவங்கதான்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
பணக்கார காதல் ஜோடி இவங்கதான்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay Deverakonda and Rashmika Mandanna Combined Net Worth
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் காதல் பயணம் ரீல் வாழ்க்கையில் தொடங்கி ரியல் வாழ்க்கையை எட்டியுள்ளது. இருவரும் முதன்முறையாக கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரசுராம் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் போது தான் இருவர் இடையே காதல் துளிர்விட ஆரம்பித்தது. இதையடுத்து 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அப்படத்திற்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால், இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.
திருமணத்துக்கு ரெடியான ராஷ்மிகா மந்தனா
இந்த நிலையில், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அக்டோபர் 3ந் தேதி அன்று குடும்பத்தினர் முன்னிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. திரைத்துறையில் பெரும் வெற்றி பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி, கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இவர்களின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
ராஷ்மிகா மந்தனா சொத்து மதிப்பு
'நேஷனல் க்ரஷ்' ராஷ்மிகா மந்தனா, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.66 கோடி. ஒரு படத்திற்கு ரூ.4 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ராஷ்மிகாவுக்கு கர்நாடகா, மும்பை, பெங்களூரு, கோவா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சொத்துக்கள் உள்ளன. விராஜ்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி. ராஷ்மிகாவிடம் ரூ.1.64 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஆடி க்யூ3, ரூ.50 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கார்கள் உள்ளன.
விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு
விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.50 முதல் ரூ.70 கோடி. அர்ஜுன் ரெட்டி வெற்றிக்குப் பிறகு, ஒரு படத்திற்கு ரூ.10 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் பெறுகிறார். பிராண்டுகளுக்கு ரூ.1 கோடி வசூலிக்கிறார். விஜய் தேவரகொண்டா ஹைதராபாத்தில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆடம்பர மாளிகையில் வசிக்கிறார். இவருக்கு சொந்தமாக ஒரு தனியார் ஜெட் விமானமும் உள்ளது. 'ரவுடி வேர்' என்ற ஃபேஷன் பிராண்டையும் நடத்தி வருகிறார். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.136 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திரைப்படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற தொழில்கள் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர்.