கோலிவுட்டின் பணக்கார ஜோடி! விக்கி - நயனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Nayanthara and Vignesh Shivan : காதலித்து திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
Nayanthara, vignesh Shivan
நடிகை நயன்தாரா, நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுமார் 7 ஆண்டுகள் உருகி உருகி காதலித்த இந்த ஜோடி, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு திருமணமான 4 மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அக்குழந்தையை பெற்றுக்கொண்டனர்.
Nayanthara, vignesh Shivan Love
திருமணத்துக்கு பின்னரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருமே சினிமாவில் பிசியாக உள்ளனர். நயன்தாரா ஹீரோயினாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்து, முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூலையும் அள்ளினார். இப்படத்தை தொடர்ந்து பான் இந்தியா ஹீரோயினாக உருவெடுத்தார் நயன்தாரா. அவரின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
Nayanthara Husband vignesh Shivan
தமிழ் சினிமாவில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். இவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். அதேபோல் இவரது கணவர் விக்னேஷ் சிவன் தற்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவரும் ஒரு படத்துக்கு ரூ.3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
Nayanthara Salary
சினிமாவை தாண்டி இவர்கள் இருவருமே பிசினஸிலும் கொடி கட்டிப் பறந்து வருகிறார்கள். நடிகை நயன்தாரா தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து நயன் ஸ்கின் என்கிற அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் கோடி கோடியாய் வருமானமும் ஈட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அப்பா எழுதி; அம்மா நடித்த பாடலை க்யூட்டாக பாடிய விக்கி - நயன் மகன்கள்
Vignesh Shivan Salary
இதுதவிர ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் இவர்கள், அதன் மூலம் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். மேலும் பெமி9, டிவைன் புட்ஸ், டிக்கெட் 9 உள்பட ஏராளமான நிறுவனங்களில் முதலீட்டாளர்களாகவும் உள்ளனர். இதுதவிர விளம்பரங்களில் நடித்தும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் நயன்.
Nayanthara Net Worth
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருமே கார் பிரியர்கள். இவர்களின் மெர்சிடிஸ் மேபேஜ், ஃபெராரி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்கள் உள்ளன. இதுதவிர நடிகை நயன்தாரா, சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றையும் வைத்திருக்கிறார். பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ் நடிகை இவர்தான்.
Vignesh Shivan Net worth
சென்னை எக்மோரில் விக்கி - நயன் ஜோடிக்கு சொந்தமாக அபார்ட்மெண்ட் உள்ள நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் விஐபி ஏரியாவாக கருதப்படும் போயஸ் கார்டனில் 100 கோடி ரூபாய் மதிப்பு ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் என சகல வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களா ஒன்றையும் கட்டி இருக்கிறார்கள்.
Combined Net Worth of Nayanthara, vignesh Shivan
சூர்யா - ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக கோலிவுட்டின் பணக்கார ஜோடியாக கருதப்படுவது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான். இவர்கள் இருவரின் மொட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.280 கோடிக்கு மேல் இருக்குமாம். இதில் நயன்தாராவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.234 கோடி, அதேபோல் விக்னேஷ் சிவனின் சொத்து மதிப்பு 50 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை; தென்னிந்திய ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?