MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Divya Saasha : தெறி பேபி திவ்யா சாஷாவா இது? ஹீரோயின்போல் மாறிய முதல்வர் விஜய் மகள் - வைரலாகும் போட்டோஸ்

Divya Saasha : தெறி பேபி திவ்யா சாஷாவா இது? ஹீரோயின்போல் மாறிய முதல்வர் விஜய் மகள் - வைரலாகும் போட்டோஸ்

CM Vijay Daughter Divya Saasha : முதல்வர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா தன்னுடைய அண்ணன் இயக்கிய சிக்மா படம் பார்க்க தியேட்டர் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 03 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சிக்மா படம் பார்க்க வந்த விஜய் மகள்
Image Credit : X

சிக்மா படம் பார்க்க வந்த விஜய் மகள்

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிவிட்டார். அவர் இயக்கிய சிக்மா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் விஜய்யின் மகள் திவ்யா சாஷா என்ன செய்கிறார் என்பது சஸ்பென்ஸாகவே இருந்து வருகின்றது.

Sigma Review : இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா முழு விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வைரலாகும் திவ்யா சாஷா போட்டோஸ்
Image Credit : X

வைரலாகும் திவ்யா சாஷா போட்டோஸ்

நீண்ட நாட்களாக சென்னை பக்கம் தலைகாட்டாமல் இருந்த திவ்யா நேற்று தன்னுடைய அண்ணன் ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தின் முதல் காட்சியை காண சென்னையில் உள்ள கமலா தியேட்டர் வந்திருந்தார். தன் அம்மா சங்கீதா உடன் திவ்யா சாஷா வந்திருந்தபோது எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. முதல்வரின் மகள் என்கிற பந்தா இல்லாமல், மிகவும் எளிமையாக வந்து திவ்யா சாஷா சிக்மா படத்தை பார்த்து சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

35
கல்வியில் அதிக கவனம்
Image Credit : X

கல்வியில் அதிக கவனம்

இதையடுத்து திவ்யா சாஷா குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தகவல்களைத் தேடி வருகின்றனர். 2005ஆம் ஆண்டு பிறந்த திவ்யா சாஷா, சிறுவயது முதலே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சென்னையில் உள்ள AISC பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை அவர் முடித்துள்ளார். கல்வியுடன் சேர்த்து விளையாட்டிலும் திவ்யாவுக்கு ஆர்வம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பேட்மிண்டன் விளையாட்டில் திறமையை வெளிப்படுத்திய அவர், பள்ளி அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

45
‘தெறி’ மூலம் சினிமா அறிமுகம்
Image Credit : instagram

‘தெறி’ மூலம் சினிமா அறிமுகம்

விஜய்யின் மகள் என்ற அடையாளத்துடன் மட்டும் இல்லாமல், சிறுவயதிலேயே திரையிலும் திவ்யா சாஷா தோன்றியுள்ளார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் 2016ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் கிளைமாக்ஸில் விஜய்யின் மகளாக திவ்யா சாஷா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் காட்சிகள் வெளியானபோது விஜய் ரசிகர்கள் மத்தியில் அவரது தோற்றம் கவனம் பெற்றது. அதன்பின்னர் எந்த படத்திலும் திவ்யா நடிக்கவில்லை. தற்போது வரை அவர் படிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

55
சினிமாவில் ஹீரோயினாக வருவாரா?
Image Credit : X

சினிமாவில் ஹீரோயினாக வருவாரா?

விஜய் முன்னணி நடிகராகவும், அவரது மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்கத்தில் ஆர்வம் காட்டி வருபவராகவும் இருக்கும் நிலையில், திவ்யா சாஷாவின் எதிர்காலம் சினிமாவை நோக்கி நகருமா என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால் தற்போது திவ்யா சாஷா தனது உயர்கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். லண்டனில் தங்கி படித்து வரும் திவ்யா சாஷா, எதிர்காலத்தில் முழுநேரமாக சினிமாவில் நடிக்க வருவாரா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

Sigma Day 1 Box Office : சிக்மா படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் நிலவரம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
தளபதி விஜய்
ஜேசன் சஞ்சய்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baththa Day 2 Box Office : பத்தா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 2ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Recommended image2
Sigma Day 1 Box Office : சிக்மா படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியதா? காத்துவாங்கியதா? முதல் நாள் நிலவரம் இதோ
Recommended image3
Now Playing
திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
Related Stories
Recommended image1
விஜய் மகளா இது? திவ்யா சாஷா கன்னடாவில் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க!
Recommended image2
தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved