விஜய் மகளா இது? திவ்யா சாஷா கன்னடாவில் என்ன செஞ்சுட்டு இருந்தாங்க!
முன்னதாக விஜய் அவரது தங்கையுடன் இருக்கும் பழைய புகைப்படம் வைரலாக நிலையில் தற்போது விஜயின் மக்கள் திவ்யா சாஷாவின் படங்கள் ட்ரெண்டாகிறது.

vijay family
ரசிகையை கைப்பிடித்த விஜய் :
முன்பு விஜயின் தீவிர ரசிகையாக இருந்தவர் சங்கீதா. தளபதி விஜய்க்கு ஏராளமான பெண் ரசிகர்கள் உள்ளனர், ஆனால் அவரது கண்கள் சங்கீதா மீது மட்டுமே பதிந்தன. அப்படித்தான் இலங்கை தமிழரான சங்கீதா சொர்ணலிங்கம் விஜய்யை திருமணம் செய்து காதலித்தார்.
vijay family
முதல் சந்திப்பு :
1996ல் விஜய் நடித்த பூவே உனக்காக படம் ஹிட்டானது. இது விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. பின்னர் விஜய் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பில் இருந்தபோது. அந்த இடத்திற்கு வந்த அங்கு சங்கீதா முந்தைய படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தார். இது தான் இவர்களின் முதல் சந்திப்பு.
vijay family
மூன்றாவது சந்திப்பில் நிச்சயம் :
முதல் சந்திப்பில் ஈர்க்கப்பட்ட விஜய் அவரது பெற்றோருக்கு சங்கீதாவை அறிமுகப்படுத்தினார். பின்னர் மூன்றாவது சந்திப்பில் இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இங்கிலாந்தில் செட்டில் ஆனா இலங்கை தொழிலதிபரின் மகளான சங்கீதாவை 1999-ம் ஆண்டு விஜய் மணந்து கொண்டார்.
vijay family
நட்சத்திர திருவிழா :
சங்கீதா ஒரு இந்து மற்றும் விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால் இந்து முறைப்படி திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவு செய்தனர். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்தில் நட்சத்திர திருவிழாவாக நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு... விஜய்யின் தங்கை மறைவு குறித்து உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி - ரசிகர்களை கண்கலங்க வைத்த வீடியோ
vijay family
இரு பிள்ளைகள் :
விஜய் - சங்கீதா தம்பதியினரின் மகிழ்ச்சியான வாழ்விற்கு கிடைத்த பரிசாக இரு பிள்ளைகள் பிறந்துள்ளார். சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். பெரிதாக இவர்கள் குறித்த தகவல் வெளிவருவதில்லை காரணம் இருவரும் வெளிநாட்டில் உள்ளனர்.
vijay family
விஜயை மிஞ்சிய சஞ்சய் :
கடந்த 2009ம் ஆண்டு விஜய்யின் வேட்டைக்காரன் ஓபனிங் பாடலில், விஜய் மகன் சஞ்சய் டான்ஸ் அடியிருந்தார். இதன்காரணமாக வருங்காலத்தில் இவர் ஹீரோவாக வருவார் என பல இயக்குனர்களே கூறினர். இவர் தற்போது சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார்.
vijay family
தெறியில் தோன்றிய மகள் :
மகனை போலவே மகளையும் விஜய் ஒரு படத்தில் அறிமுகம் செய்தார். இவர் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் விஜயின் மகள் திவ்யா ஒரு காட்சியில் தோன்றியிருப்பர். இதன் பிறகு இரண்டு பிள்ளைகளும் எந்த படத்திலும் வரவில்லை.
மேலும் செய்திகளுக்கு..விஜய் மகன், மகளையும் விட்டு வைக்கலையா?... தளபதி ரசிகர்களுக்கு பறந்த உத்தரவு...
vijay family
படிப்பை முடித்து திரும்பிய திவ்யா :
இப்போது விஜய் மகள் திவ்யா சாஷா கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.