- Home
- Cinema
- Baththa Day 2 Box Office : பத்தா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 2ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Baththa Day 2 Box Office : பத்தா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... 2ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Baththa Movie Box Office : பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கேங்ஸ்டராக நடித்துள்ள பத்தா திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Baththa Movie Day 2 Box Office
வழக்கமான ரவுடி கதைகளில் இடம்பெறும் வன்முறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் சம்பவங்கள் அல்லது பெண் குழந்தைகளை மையப்படுத்திய கனமான காட்சிகள் இல்லாமல், ரசிகர்களை ரசிக்க வைக்கும் ஃபீல் குட் கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது ‘பத்தா’. இந்த படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி அன்று ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்துள்ளனர். குறிப்பாக முதல் நாளை காட்டிலும் இரண்டாவது நாளில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Baththa Review : விஜய் சேதுபதி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? பத்தா விமர்சனம் இதோ
2வது நாளில் எகிறிய வசூல்
பிரியா அட்லீ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ், சாய், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் சுமார் ரூ.1.50 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் காட்சிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்த போதிலும், வசூல் அதிகரித்து சுமார் ரூ.2.70 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இரண்டு நாட்களில் ‘பத்தா’ திரைப்படம் சுமார் ரூ.4.20 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் சேதுபதி - சிறுவன் சாய் நடிப்புக்கு பாராட்டு
படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்புடன் சிறுவன் சாயின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருவருக்கும் இடையேயான காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆக்ஷன் கதைக்குள் நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
வார இறுதியில் வசூல் அதிகரிக்குமா?
இந்த வாரம் வெளியான திரைப்படங்களில் ‘பத்தா’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான டிக்கெட் முன்பதிவும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஒரே வாரத்தில் பல திரைப்படங்கள் வெளியாகியிருப்பதால் வசூலில் கடும் போட்டியும் நிலவுகிறது. குறிப்பாக ‘பத்தா’ மற்றும் ‘சிக்மா’ படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள ‘பத்தா’, வார இறுதி நாட்களிலும் இதே வேகத்தை தக்க வைத்துக் கொள்கிறதா என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

