MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Baththa vs Yezhu Kadal Yezhu Malai Box Office : கோடிகளை குவித்த பத்தா; லட்சங்களில் தடுமாறும் ஏழு கடல் ஏழு மலை... முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

Baththa vs Yezhu Kadal Yezhu Malai Box Office : கோடிகளை குவித்த பத்தா; லட்சங்களில் தடுமாறும் ஏழு கடல் ஏழு மலை... முதல் நாள் வசூல் நிலவரம் இதோ

Baththa vs Yezhu Kadal Yezhu Malai Day 1 Box Office : விஜய் சேதுபதி நடித்த பத்தா மற்றும் நிவின் பாலி நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படங்களின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 02 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பத்தா கதை என்ன?
Image Credit : Youtube

பத்தா கதை என்ன?

கேங்ஸ்டர் திரைப்படம் என்றாலே அதிரடியான சண்டைகள், துப்பாக்கிச் சத்தம், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், மாஸ் வசனங்கள் என வழக்கமான அம்சங்களையே எதிர்பார்க்கிறோம். ஆனால், ‘பத்தா’ அந்தப் பாதையில் பயணிக்காமல், ஒரு குற்றவாளியின் வாழ்க்கைக்குள் இருக்கும் உணர்வுகளையும், உறவுகளையும் முன்னிலைப்படுத்த முயற்சித்திருக்கிறது.

படத்தின் கதாநாயகன் பத்தா. குற்ற உலகில் செல்வாக்குடன் இருக்கும் அவனது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் நுழைகிறான். ஆரம்பத்தில் இருவருக்கும் இடையேயான சம்பவங்கள் நகைச்சுவையாக நகர்ந்தாலும், காலப்போக்கில் அந்த உறவு வேறு பரிமாணத்தைப் பெறுகிறது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத் தொடங்கும் அந்தப் பயணம், பத்தாவின் மனதிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, பொறுப்பு, பாசம், குடும்பம் போன்ற விஷயங்களைப் பற்றி அவன் சிந்திக்கத் தொடங்குவதற்கு இந்த உறவே காரணமாகிறது. ஒருபுறம் வன்முறை நிறைந்த உலகில் வாழும் கேங்ஸ்டர்; மறுபுறம் வாழ்க்கையை அப்பாவித்தனமாக அணுகும் சிறுவன். இவர்களின் குணாதிசயங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் பல ரசிக்க வைக்கும் தருணங்களையும் கொடுத்துள்ள படம் தான் பத்தா.

Baththa Review : விஜய் சேதுபதி பந்தயம் அடித்தாரா? பல்பு வாங்கினாரா? பத்தா விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஏழு கடல் ஏழு மலை கதை என்ன?
Image Credit : Think Music India

ஏழு கடல் ஏழு மலை கதை என்ன?

பத்தாவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆன ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தில் நிவின் பாலி ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கு பெயரே கிடையாது. சுமார் 4,000 ஆண்டுகளாக மரணமின்றி வாழ்ந்து வரும் மனிதராக அவர் காட்டப்படுகிறார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து வந்தாலும், அவரது வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது ஒரே விஷயம்தான் – அவர் நேசிக்கும் பெண்ணைத் தேடுவது. பல நூற்றாண்டுகளாக அந்தக் காதலியைத் தேடி அலைந்தாலும், அவரால் அவளை நேரில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படியான சூழலில், தீபாவளி இரவில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில், நீண்ட காலமாக தேடி வரும் பெண் மீண்டும் தோன்றுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே கதையின் டர்னிங் பாயிண்ட்.

34
பத்தா படத்தின் வசூல்
Image Credit : X

பத்தா படத்தின் வசூல்

பத்தா திரைப்படத்திற்கு முழுக்க முழுக்க பாசிடிவ் விமர்சனங்கள் தான் வருகின்றன. இருப்பினும் இப்படம் வசூலில் சுமாரன தொடக்கத்தையே கொடுத்திருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.1.73 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.50 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. கர்நாடகாவில் 10 லட்சமும், ஆந்திராவில் 3 லட்சம் வசூலித்துள்ளது. இதன் ஓவர்சீஸ் வசூலையும் சேர்த்தால் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் ரூ.2 கோடி வசூலித்துள்ளது பத்தா. தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை என்பதால் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸ்
Image Credit : Think Music India

ஏழு கடல் ஏழு மலை பாக்ஸ் ஆபிஸ்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள திரில்லர் திரைப்படம் தான் ஏழு கடல் ஏழு மலை. இப்படம் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் ரிலீஸ் ஆகி உள்ளது. சூரி இப்படத்தில் காமெடியனாக நடித்திருக்கிறார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இதனால் வசூலும் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே இந்தியாவில் ரூ.60 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 50 லட்சம் கூட வசூலிக்கவில்லையாம். அடுத்தடுத்து 3 நாள் விடுமுறை வருவதால் இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yezhu Kadal Yezhu Malai Review : ஏழு கடல் ஏழு மலை படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினி முதல் சூர்யா வரை... இன்று கோடிகளில் புரளும் கோலிவுட் ஹீரோக்களின் முதல் சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
Recommended image2
Dont Trouble The Trouble Review : ஃபகத் ஃபாசிலின் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? டோண்ட் டிரபிள் த டிரபிள் விமர்சனம்
Recommended image3
Anbil Avan Review : அசோக் செல்வனின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? அன்பில் அவன் விமர்சனம்
Related Stories
Recommended image1
ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் 'மகாராஜா': ஆஸ்கர் நடிகருடன் நடிக்கத் துடிக்கும் விஜய் சேதுபதி; கைகூடுமா பட வாய்ப்பு?
Recommended image2
ரோலெக்ஸை மிஞ்சுவாரா வால்டர்? பென்ஸ் மூலம் LCUவில் வில்லனாக எண்ட்ரி கொடுத்த நிவின் பாலி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved