ரெட்ரோ முதல் குட் பேட் அக்லி வரை; இந்த வார கோலிவுட் அப்டேட்ஸ் என்னென்ன?
தமிழ் சினிமாவில் இந்த வாரம் விக்ரம், சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் பட அப்டேட்டுகள் வரிசையாக வெளியாக உள்ளன. அது என்னென்ன அப்டேட் என்பதை பார்க்கலாம்.

New Movie Updates Good Bad Ugly, Veera Theera Sooran Release Information! தமிழ் சினிமாவில் இந்த மாதம் பெரிய படங்கள் எதுவும் இதுவரை ரிலீஸ் ஆகாவிட்டாலும், இம்மாத இறுதியில் ரம்ஜான் விடுமுறையை ஒட்டி மார்ச் 27ந் தேதி விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து ஏப்ரலில் அஜித்குமாரின் குட் பேட் அக்லி, மே மாதம் சூர்யா நடித்த ரெட்ரோ படம் என வரிசையாக தமிழில் பிரம்மாண்ட படங்கள் வரிசைகட்டி ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அதன் அப்டேட்டுகள் இந்த வாரம் என்னென்ன ரிலீஸ் ஆக உள்ளது என்பதை பார்க்கலாம்.

குட் பேட் அக்லி (Good Bad Ugly)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரம்யா என்கிற கேரக்டரில் நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, சிம்ரன், அர்ஜுன் தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஓஜி சம்பவம் பாடல் வருகிற மார்ச் 18ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... அடிச்சு நொறுக்கும் எனெர்ஜியில் ஆதிக்; தெறிக்க விட்ட அஜித்! 'குட் பேட் அக்லீ' மேக்கிங் வீடியோ!

வீர தீர சூரன் (veera dheera sooran)
சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படம் இந்த ஆண்டு ரம்ஜான் விடுமுறையை ஒட்டி வருகிற மார்ச் 27ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 20ந் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

ரெட்ரோ (Retro)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலான கண்ணாடி பூவே பாடல் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இந்த வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ திரைப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... இதுவரை எந்த தமிழ் படத்துக்கு செய்யாததை ‘ரெட்ரோ’ படத்துக்காக செய்த பூஜா ஹெக்டே!