MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'வாரிசு' பாடல் குறித்து... தளபதி ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன டான்ஸ் மாஸ்டர் ஜானி!

'வாரிசு' பாடல் குறித்து... தளபதி ரசிகர்களுக்கு புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன டான்ஸ் மாஸ்டர் ஜானி!

தளபதி விஜயின் 'வாரிசு' பட பாடல், கர்நாடகாவில் அழகிய இடத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடன இயக்குனர் ஜானி. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 21 2022, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தளபதி விஜய் தற்போது பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான, வம்சி இயக்கத்தில்... 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், படம் குறித்து ஏதேனும் அப்டேட் வருமா என? ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்வது போல் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

சமீபத்தில் 'வாரிசு' படத்தில் இருந்து வெளியான லிரிக்கல் பாடலான, 'ரஞ்சிதமே' பாடல்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை செய்து வரும் நிலையில், விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்து... அந்த பாடலின் நடன இயக்குனர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

ஜெயிலர் படத்திற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகும் தலைவரின் படம்..! செம்ம குஷியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

35

தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள புதிய பாடல் ஒன்று பல்லாரியில் உள்ள அழகிய இடத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளார். இது ஒரு ஸ்ட்ரெஸ் பாஸ்டரான பாடலாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்வது போல், சில மிருக பொம்மைகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் இவர் பகிர்ந்துள்ளார். எனவே இந்த பாடலில் சில மிருகங்களும்.. இடம்பெற வாய்ப்புள்ளதை நம்மால் யூகிக்க முடிகிறது.

45

ராம் சரணின் யவடு மற்றும் மகேஷ் பாபு நடித்த மகரிஷி போன்ற சூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி, விஜய்யை வைத்து குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த இந்த படத்தை இயக்கியுள்ளார்.  'வாரிசு' படத்தின் திரைக்கதையை பைடிப்பள்ளி, ஹரி மற்றும் அஹிஷோர் சாலமன் இணைந்து எழுதியுள்ளனர். இந்த இடத்தின் மூலம் முதல் முறையாக விஜய்க்கு ஹீரோயினாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரத்குமார், பிரபு, குஷ்பூ, பிரகாஷ் ராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த 'சந்திரமுகி' பட நடிகை! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடுத்து கொண்ட செல்ஃபி!

55

தளபதி விஜய்யின் படத்திற்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார் தமன். தில் ராஜு தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படம், ஜனவரி மாதம்... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜானி மாஸ்டரின் பதிவும், அவர் வெளியிட்டுள்ள வேடிக்கையான புகைப்படங்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved