17 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்தை சந்தித்த 'சந்திரமுகி' பட நடிகை! உச்சகட்ட மகிழ்ச்சியில் எடுத்து கொண்ட செல்ஃபி!
நடிகை மாளவிகா 17 வருடம் கழித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த போது, அவருடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு... அஜித்குமார் நடிப்பில் வெளியான 'உன்னைத் தேடி' என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. இவர் நடித்த முதல் படமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அறிமுகமான வருடமே இவர் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியானது.
சரியான கதை தேர்வு இல்லாத காரணத்தால், தமிழ் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கினார். ஆனால் அதிக பட்சமாக தமிழ் படங்களில் தான் மாளவிகா நடித்துள்ளார்.
இவருக்கான மார்க்கெட் குறைய துவங்கியது, சித்திரம் பேசுதடி போன்ற படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடும் அளவிற்கு சென்றார். மேலும் மாய கண்ணாடி, மச்சக்காரன், சிங்கக்குட்டி போன்ற படங்களில்... சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.
அதே போல் இயக்குனர் வாசு இயக்கத்தில், 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தில்... மாளவிகா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே... இந்த படத்தில் இவர் நடித்து முடித்து சுமார் 17 வருடங்கள் ஆகும் நிலையில், சமீபத்தில் நடத்த இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட்டில் கலந்து கொண்டபோது, அதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
அப்போது மிகவும் உற்சாகமாக மாளவிகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். மேலும் நடிகை மீனாவுடனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நான்கே படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ்..! உதயநிதி துவங்கி வைத்த படப்பிடிப்பு..!