Chiyaan61 : முகத்தில் சாம்பலுடன் மாஸ் லுக்கில் விக்ரம்...சீயான் 61 பர்ஸ்ட் லுக்..
இதன் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. சாம்பல் பூசிய முகத்துடன் வேற லெவலில் மாஸ் ]காட்டுகிறார் தங்கலான் விக்ரம்.
பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் சமீபத்தில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் கரிகால சோழனாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். ரசிகர்களை ஈர்த்துவிட்ட சியானின் கோப்ரா படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. இந்த படத்தை ஞானவேல் முத்து இயக்கியிருந்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய இந்த படம் பலகட்ட நிறுத்தத்திற்கு பிறகு சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதோடு ப்ரமோஷனுக்காக நடிகர்கள் சென்றிருந்த விழாக்களும் நல்லவரவேற்பை பெற்றது. ஆனால் கோப்ரா படம் அந்த அளவிற்கு கூட வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தது.
மேலும் செய்திகளுக்கு...அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த துணிவு...பொங்கல் ரிலீஸ் கன்பார்ம் ...
தற்போது விக்ரம் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் மற்றும் தனது 61வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்குகிறார். இந்த படம் கே ஜி எஃப் பின்னணிகள் உருவாகும் என ஏற்கனவே பா ரஞ்சித் கூறியிருந்தார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திர மாநிலமான கடப்பாவில் துவங்கியுள்ளது. இதில் நடிகர் பசுபதி இணைந்திருந்தார்.
chiyaan 61
சியான் 61 படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. பிரிட்டிஷ் காலகட்டத்தில் இந்தியா தொழிலாளர்களின் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. சாம்பல் பூசிய முகத்துடன் வேற லெவலில் மாஸ் ]காட்டுகிறார் தங்கலான் விக்ரம்.
ஆக்ஷன் திரில்லராக வெளியான உதயநிதியின் கழகத் தலைவன் டீசர் இதோ..