அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த துணிவு...பொங்கல் ரிலீஸ் கன்பார்ம் ...
டப்பிங் பணிகள் துவங்கி விட்டதால் கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
thunivu
நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக துணிவு படம் உருவாகி வருகிறது. அஜித்குமாரின் 61வது படமான இது வங்கி கொள்ளை தொடர்பான கதைக்களத்தை கொண்டுள்ளது. இந்த படத்தில் இரு வேறு தோற்றங்களில் அஜித்குமார் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
thunivu
மங்காத்தா ஸ்டைலில் உருவாக உள்ள இதில் ப்ரபஷராக அஜித் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள நாயகியும் மஞ்சு வாரியர் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை, தாய்லாந்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வரந்தது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் பணிகள் டப்பிங் துவங்கியுள்ளது சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் இன்று முதல் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றுள்ளது.
thunivu
இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக இந்த படத்தில் நாயகன் அஜித் டப்பிங் செய்வார் என்றும் அதனை அடுத்து மஞ்சுவாரில் உள்ளிட்ட பிற நடிகர்கள் டப்பிங் செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. டப்பிங் பணிகள் துவங்கி விட்டதால் கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.