சிக்ஸ் பேக்கில் தெறிக்கவிட்ட சியான் விக்ரம்... சோசியல் மீடியாவில் வைரலாகும் வெறித்தனமான போட்டோ...!
தமிழ் சினிமாவின் நடிப்பு ராட்சசன் சீயான் விக்ரமின் சிக்ஸ் பேக் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களே பொறாமைப்படும் அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்கும் முன்னணி நடிகர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நம்ம சீயான் விக்ரம்.
தற்போது 54 வயதாகும் விக்ரம், இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு விதவிதமாக கெட்டப்புகளை மாற்றி அசத்தலாக நடித்து வருகிறார். அப்படிப்பட்ட விக்ரம் விரைவில் தாத்தாவாகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் எடையைப் பொறுத்தவரை ஐ படத்தில் அவர் காட்டிய மாற்றம் அசாத்தியமானது. பாடி பில்டர் கதாபாத்திரத்திற்காக சிக்ஸ் பேக்கும், வைரஸால் பாதிக்கப்பட்ட கேரக்டருக்காக அப்படியே ஒல்லியாக இளைத்தும் யாருமே செய்ய துணியாததை செய்து காட்டியவர்.
கடாரம்கொண்டான்' படத்தை தொடர்ந்து விக்ரமின் 58வது படத்தை இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்து வரும் இந்த படத்திற்கு ''கோப்ரா'' என பெயரிடப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது கொரோனா காரணமாக அந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் விக்ரம் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை விக்ரமின் மகன் துருவ் தான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். 54 வயதிலும் உடலை பிட்டாக பராமரிக்கும் விக்ரமின் இந்த போட்டோ லைக்குகளை வாரிக்குவிக்கிறது.
இந்த போட்டோவை தான் இன்று தனது தந்தையின் லுக் என துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.