ராதா, அம்பிகாவுக்கு வாரி கொடுத்த எம்ஜிஆர் – உண்மையை போட்டு உடைத்த சித்ரா லட்சுமணன்!
கஷ்டப்படுபவர்களுக்கு மட்டுமின்றி சினிமா பிரபலங்களுக்கும் எம்ஜிஆர் வாரி கொடுக்கும் வள்ளல் என்று நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
Ambika and Radha
எம்ஜிஆர் வாரி கொடுக்கும் வள்ளல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சினிமாவில் நடிகராக இருந்து தமிழகத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தார். ஒரு முதல்வராக ஏழை எளிய மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார். ஆனால், சினிமா பிரபலங்களுக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அதுவும், சினிமாவில் உச்சத்திலிருந்த ராதா மற்றும் அம்பிகாவுக்கும் வாரி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர்.
Radha and Ambika
இது குறித்து நடிகரும், விமர்சகருமான சித்ரா லட்சுமணன் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக கொட்டி கட்டி பறந்தவர் எம்ஜிஆர். இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். காலத்தால் அழியாத காவியங்களை படைத்துள்ளார். இன்றும் அவரது படங்கள் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றுள்ளன.
Radha and Ambika
தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்தார். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், மோகன், விஜயகாந்த் மற்றும் பிரபு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். திருமணத்தில் உச்சத்திலிருக்கும் போதே ராதா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சினிமாவிலிருந்து விலகினார். எனினும், பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக வலம் வருகிறார். இதே போன்று நடிகை அம்பிகா. இவர் இன்னும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
Ambika
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டங்களில் ராதா மற்றும் அம்பிகா இருவரும் இணைந்து ஏஆர்எஸ் கார்டனை விலைக்கு வாங்கினார்கள். இது தனியாருக்கு சொந்தமான நிலம். தனியாருக்கு சொந்தமான இந்த ஏஆர் எஸ் கார்டனை தான் இருவரும் வாங்கினார்கள். கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் ஏக்கர் கொண்ட அந்த இடத்தில் மதிப்பு பல ஆயிரம் கோடி ஆகும். அவர்கள் வாங்கிய இடத்திற்கு பக்கத்தில் தான் பாராதிராஜாவுக்கு சொந்தமான இடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.