- Home
- Cinema
- 'சித்தி 2' வெண்பாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? மணமகள் கோலத்தில் கழுத்தில் தாலியோடு வெளியிட்ட போட்டோஸ்!
'சித்தி 2' வெண்பாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? மணமகள் கோலத்தில் கழுத்தில் தாலியோடு வெளியிட்ட போட்டோஸ்!
சித்தி 2 (Chithi 2 serial) சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்த, ப்ரீத்தி ஷர்மா (Preethi sharma)... தற்போது மணக்கோலத்தில், கழுத்தில் தாலியுடனும் வெளியிட்டுள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா, மணமகள் கோலத்தில் கழுத்தில் தாலியோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இவரது இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலர்? உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா என செம்ம ஷாக்கிங்காக கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் இது மாடலிங் ஷூட்டுக்காக எடுக்க பட்ட புகைப்படம் தான் இது... திருமண முகூர்த்த புடவைகளுக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தான் திருமண பெண்ணாகவே மாறியுள்ளார்.
தற்போது ப்ரீத்தி ஷர்மா, ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா,தயாரித்து நடித்து வந்த 'சித்தி 2' சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ராதிகாவுக்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில், கவின் என்பவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் ப்ரீத்தி ஷர்மா.
ராதிகா தன்னுடைய கணவரின் அரசியல் பணிக்காக இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது 'சித்தி 2' சீரியல் கதை முழுவதும், வெண்பா கதாபாத்திரத்தை சுற்றியே நகர்ந்து கொண்டுள்ளது.
சித்தி 2 சீரியல் மூலம், ப்ரீத்தி ஷர்மாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
சித்தி 2 (Chithi 2 serial) சீரியலில் ராதிகாவின் மகளாக நடித்த, ப்ரீத்தி ஷர்மா (Preethi sharma)... தற்போது மணக்கோலத்தில், கழுத்தில் தாலியுடனும் வெளியிட்டுள்ள போஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிகிறது. கவர்ச்சிக்கும், எப்போதும் இவர் குறை வைத்தது இல்லை.
அந்த வகையில் தான் தற்போது திருமண கோலத்தில் மிகவும் வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ளார். சமீபத்தில் இவர் கருணாஸ் மகன் கென் நடித்த ஆல்பம் பாடலில் அவருடன் டான்ஸ் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.