ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் குவியும் வசூல்; சாவா படைத்த புது சாதனை!
ராஷ்மிகா மற்றும் விக்கி கெளஷல் நடிப்பில் வெளியான சாவா திரைப்படம் இந்தி பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை ஒன்றை படைத்து மாஸ் காட்டி உள்ளது.

Chhaava Movie Box Office Record : ராஷ்மிகா மந்தனா மற்றும் விக்கி கௌஷல் நடித்த 'சாவா' திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் வாரத்திலேயே வசூல் வேகமாக அதிகரித்ததால், 500 கோடி ரூபாயைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புகளை மெய்ப்பிக்கும் விதமாக, உலகளவில் 800 கோடிக்கு மேல் வசூலித்த 'சாவா' இந்தி மார்க்கெட்டில் மட்டும் 66 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது.
Chhaava
பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்த Chhaava
இதற்கு முன்பு 'ஸ்த்ரீ 2' மற்றும் 'புஷ்பா 2' ஆகிய படங்கள் 500 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்தன. தற்போது 'சாவா' அந்த வரிசையில் இணைந்துள்ளது. இதுவரை பார்ட் 2 படங்கள் மட்டுமே இந்தியில் 500 கோடிக்கு மேல் வசூலித்திருந்த நிலையில், முதன்முறையாக ஒரு பார்ட் 2 இல்லாத படம் இந்த சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. குறிப்பாக, இந்த 600 கோடி ரூபாய் வசூல் இந்தி பாக்ஸ் ஆபிஸில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கி கௌஷலின் திரைவாழ்க்கையில் இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு புதிய அடையாளத்தைத் தேடித் தந்துள்ளது. ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே 'புஷ்பா 2' படத்தின் மூலம் இந்த சாதனையைப் படைத்திருந்தாலும், 'சாவா' அவருக்கு இன்னொரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்... Pushpa 2 Vs Chhaava: புஷ்பா 2 வசூலை முறியடித்த சாவா! எங்கு தெரியுமா?
Chhaava Box Office
Chhaava கதை என்ன?
மராட்டியப் பேரரசின் புலி என்று அழைக்கப்படும் சிவாஜியின் மகன் சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டது 'சாவா'. விக்கி கௌஷல் இந்தப் படத்தில் வெறும் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று ரசிகர்கள் பாராட்டுகின்றனர். விக்கி கௌஷலின் முந்தைய படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தாலும், 'சாவா' அளவுக்கு வெற்றி பெறவில்லை. 'சாவா'வின் மகத்தான வெற்றி விக்கி கௌஷலின் நடிப்பை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
Rashmika
Rashmika-வின் மார்கெட்டை காப்பாற்றிய சாவா
'சாவா' படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு அவரது முந்தைய படங்களை விட ஒரு படி மேலே இருந்தது. கன்னடத் திரையுலகின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தற்போது தேசிய அளவில் பிரபலமாகியுள்ளார். அவரது இந்த வளர்ச்சிக்குத் திரைப்படங்கள் மீதான அவரது காதல், கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவை முக்கியக் காரணங்கள். 'சிக்கந்தர்' திரைப்படம் தோல்வியடைந்தாலும், 'சாவா'வின் வெற்றி ராஷ்மிகாவின் மார்க்கெட் சரியவிடாமல் வைத்துள்ளது. இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... 'சாவா' திரைப்படத்தை பார்த்து... கோட்டையில் இரவு, பகலாக தங்கப் புதையலை தேடும் மக்கள்!