'சாவா'திரைப்படத்தை பார்த்து கோட்டையில் புதையல் இருப்பதை உண்மை என நம்பிய மக்கள் இரவு, பகலாக புதையலை தேடி வருகின்றனர்.
Chhaava: People who searched for treasure in the castle: விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் சாவா. (Chhaava) சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டில் ரூ.500 கோடியை கடந்த முதல் படம் என்ற பெருமையையும் சாவா பெற்றுள்ளது.
கோட்டையில் தங்க புதையல்
வரலாற்று புனைவு படம் என்பதால் படத்தில் கோட்டை தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளன. இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகே புதைக்கப்பட்ட தங்கம், தங்க நாணயங்கள் குறித்து சாவா படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சாவா படத்தில் ஆசிர்கர் கோட்டையில் புதையல் இடம்பெற்றிருப்பது குறித்த தகவல் அந்த கோட்டையின் அருகில் இருக்கும் கிராமங்களில் வைரலாக பரவியது.
தங்கத்தை தேடி குவிந்த மக்கள்
படத்தில் காட்டப்பட்டதுபோல் ஆசிர்கர் கோட்டையில் உண்மையில் தங்கப் புதையல் இருக்கலாம் என நம்பிய மக்கள் அலை அலையாக ஆசிர்கர் கோட்டைக்கு திரண்டு வந்தனர். அந்த பகுதியில் இரவு பகலாக தோண்டி தங்கம் இருக்கிறதா? என தேடி வருகின்றனர். சிலர் கையில் மெடடல் டிடெக்டர் கருவியை கைகளில் வைத்துக் கொண்டு ஆசிர்கர் கோட்டையை சுற்றியுளள பகுதிகளில் தங்கத்தை தேடி அலைகின்றனர். செல்போனின் டார்ச் வெளிச்சத்தில் கோட்டையைச் சுற்றி மக்கள் குழிகள் தோண்டி புதையலை தேடும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
600 கோடியில் உருவான கமல் படம் உள்பட அதிக செலவில் எடுக்கப்பட்ட டாப் 30 இந்திய படங்கள் லிஸ்ட் இதோ
இரவு, பகலாக தங்க வேட்டை
அந்த கோட்டையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் தங்க நாணயங்கள் தேடி மகக்ள் குழிகள் தோண்டி வருவதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல் துறைக்கு தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து புதையலைத் தேடிய மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் ஒரு சில மக்கள் போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி இரவு நேரங்களில் புதையல் இருக்கிறதா? என தோண்டி வருகின்றனர்.
உண்மையில் தங்க நாணயங்கள் உள்ளதா?
இது குறித்து பேசிய புர்ஹான்பூர் மாவட்ட ஆட்சியர் ஹர்ஷ் சிங், ''ஆசிர்கர் கோட்டையில் புதையலை தேடும் மக்கள் காவல்துறையினர் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கோட்டை பகுதியில் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானதாக கருதப்படும். காவல்துறையின் உத்தரவை மீறி கோட்டையில் குவியும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
Rajinikanth: ரஜினிகாந்த் குரல் ரகசியம்: அவரே பகிர்ந்த சீக்ரெட்!
