Rajinikanth: ரஜினிகாந்த் குரல் ரகசியம்: அவரே பகிர்ந்த சீக்ரெட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குரல் ரகசியத்தை முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றிய தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.

ஆல் இந்தியா சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்திற்கு சில சிறப்புகள் உள்ளன. அவர் மற்ற ஹீரோக்களை விட மிகவும் வித்தியாசமானவர். அதேபோல் அவர் சிக்ஸ் பேக் வைத்து நடிக்காவிட்டாலும் இவரை ரசிக்க உலகம் முழுவதிலும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
திரையில் லேட்டஸ்ட் ட்ரெண்டைப் இவர் பின்பற்றுவது இல்லை என்றாலும். அனைவரையும் தன்னை பின்பற்றும்படி செய்கிறவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த விட சினிமா பின்னணியும் இன்றி, இவர் இந்த அளவுக்கு உயர்த்ததற்கான முக்கிய காரணம் இவரின் விடாமுயற்சியும், உழைப்பும் தான்.
ரஜினிகாந்த் குரல் ரகசியம்
அதிரும் ஸ்டைல்.. திக்குமுக்காட வைக்கும் மேனரிசத்துடன் பாக்ஸ் ஆபிஸை சிங்கிள் ஹேண்டில் ஆளும் ரஜினிகாந்த் தன்னுடைய கணீர் குரலால் ரசிகர்களை அதிகம் கவனிக்க வைப்பவர். அவருடைய குரலுக்கான ஈர்ப்பு குறித்த ரகசியத்தையும், அதை அவர் எப்படி மெயின்டன் செய்கிறார் என்பதையும், தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
வெந்நீரை வாயில் ஊற்றி, சிறிது நேரம் ஆயில் புல்லிங்
தன்னுடைய குரலை மற்றவர்கள் கவனித்து கேட்கும் விதத்தில், சினிமாவுக்கு வந்ததிலிருந்து பயிற்சி செய்து வருகிறாராம் ரஜினிகாந்த். அதாவது “காலையில் எழுந்தவுடன் சீரகம் போட்டு கொதிக்க வைத்த வெந்நீரை வாயில் ஊற்றி, சிறிது நேரம் ஆயில் புல்லிங் செய்வாராம்.
குரலிக்கான பயிற்சி
பிறகு என் குரலை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பேஸ் வாய்ஸில் பேசி பயிற்சி செய்கிறேன். தினமும் சில நிமிடங்கள் இப்படி செய்தால் அழகான, கட்டுப்பாடுள்ள இனிமையான குரல் சொந்தமாகும். இதுதான் என் குரல் ரகசியம், யாராக இருந்தாலும் இப்படி செய்யலாம், ரொம்ப ஈஸி" என்றார் ரஜினிகாந்த்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் 'கூலி'
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், மே மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க,சன் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.