MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அடக்கடவுளே..கௌதமிக்கா இந்த நிலைமை?..மிகவும் சிரமத்தில் இருப்பதாக கதறல்..

அடக்கடவுளே..கௌதமிக்கா இந்த நிலைமை?..மிகவும் சிரமத்தில் இருப்பதாக கதறல்..

ஆறு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு விட்டதால் எனக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்" என்று மனுவில் கவுதமி கோரியிருந்தார்.

2 Min read
Kanmani P | Asianet News
Published : Mar 24 2022, 06:03 PM IST| Updated : Mar 24 2022, 06:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Gautami

Gautami

90களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் கௌதமி. இவர் ரஜினி,கமல், பிரபு என அப்போதைய ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆந்திராவை பிறப்பிடமாக கொண்ட இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏகபோகமாக இருந்தது.

28
Gautami

Gautami

ஹிந்தி, கன்னடம், மலையாளம் என தூள் கிளப்பி வந்த இவருக்கு தமிழில் அபூர்வசகோதரர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கமல் உடன் ரோமன்ஸில் கலக்கி இருப்பர் கௌதமி.

38
Gautami

Gautami

இதையடுத்து பல முன்னணி நாயகர்களுடன் நடித்து வந்த இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு விருது உட்பட பல விருதுகளை   வென்றுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அட..அவன் இவன் ஜமீன்தாரின் மனைவி...90ஸ் பிரபலமா?

48
Gautami

Gautami

கௌதமி 1998 இல் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை மணந்தார், இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் 1999 இல் பிறந்தார். அதே ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

58
Gautami

Gautami

பின்னர் 2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடிகர் கமல்ஹாசனுடன் கௌதமி உறவில் இருந்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசனுடனான உறவை முறித்துக் கொண்டதாக கௌதமி தனது அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

68
Gautami

Gautami

முன்னதாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட கௌதமி சிகிச்சைக்கு பின்னர் மீண்டார். அதோடு தன்னுடைய லைஃப் அகெய்ன் அறக்கட்டளை மூலமாக ஏராளமான புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருவதோடு. பல உதவிகளையும் செய்து வருகிறார்.

78
Gautami

Gautami

இதையடுத்து பாஜகவில் இணைந்த கௌதமி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். பாஜகவுக்காக தீவிர பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.   

மேலும் செய்திகளுக்கு...AK 62 Update : ஏ.கே.62-வில் நடிக்கும் அஜித்துக்கு ரூ.100 கோடி! இயக்கும் விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவுதான் சம்பளமா

88
Gautami

Gautami

இந்நிலையில் வரி ஏய்ப்பு வழக்கில் கௌதமி சிக்கியுள்ளார்.  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016-ம் ஆண்டு  கௌதமி விற்றுள்ளார். இந்த சொத்துக்கான வரியை முறையாக செலுத்தவில்லை என்று வருமான வரித்துறை கௌதமியின் 6 வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளனர். இது குறித்து இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் வரியில் மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது... மேலும் நான்கு வாரங்களுக்குள் பகுதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

About the Author

KP
Kanmani P
வங்கிக் கணக்கு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved